மொட்டைச்
சாமியார் முதல்வராக உள்ள உத்திரபிரதேச மாநிலத்தில் ஹர்தோய் எனும் நகரத்தில் உள்ள ஸ்ரவணாதேவி
கோயிலில் பாஜக வின் தலைவர் நரேஷ் அகர்வால் என்பவரும் அவரது மகன் நிதின் அகர்வால் என்பவரும்
தங்களின்” பாஸி” சமூகத்தவருடைய கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
அந்த
ஜாதிக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கெல்லாம் கூட்டம் முடிந்ததும் பிரசாதம் கொடுத்துள்ளார்கள்.
அட்டைப் பெட்டியில் வைத்துக் கொடுக்கப்பட்ட
அந்த பிரசாதப் பெட்டியில் என்னவெல்லாம் இருந்தது தெரியுமா?
ஒரு
இனிப்பு
இரண்டு
பூரி அதற்கான தொடுகறி
மற்றும்
ஒரு
குவார்ட்டர் மது பாட்டில்.
கோயிலில்
நடைபெற்ற ஜாதிக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, கிராமத் தலைவர்கள்
தங்களுக்கு தேவையான பிரசாதப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டு ஊரில் உள்ளவர்களுக்கும் கொடுக்க
வேண்டும் என்று நிதின் அகர்வால் மைக்கில் அறிவித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
பிரசாதப்
பெட்டியில் இருந்ததைப் பார்த்த
சிலருக்கு
அதிர்ச்சி
பலருக்கோ
இன்ப அதிர்ச்சி
சிறுவர்களுக்கும்
கூட குவார்ட்டர் மது பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு
கோயிலுக்குள் ஜாதிய நிகழ்ச்சி நடத்தலாம்,
ஒரு
கோயிலுக்குள் மது பாட்டில் வினியோகிக்கலாம்.
ஒரு
கோயிலுக்குள் கொலை செய்யலாம்.
ஒரு
கோயிலுக்குள் பாலியல் வன் கொடுமை நிகழ்த்தலாம்.
ஒரு
கோயிலுக்குள் பாலியல் லீலைகளையும் நிகழ்த்தலாம்.
இதனால்
எல்லாம் கெட்டுப் போகாத கோயிலின் புனிதம், பெண்கள் அடியெடுத்து வைத்தால் மட்டும் கெட்டு
விடும் போல.
இதிலே
என்ன சிறப்பு என்றால்
மேலே
சொன்ன அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்கிற காவிகள்தான் பெண்கள் கோயிலுக்குச் செல்வதையும்
தடுக்கிறார்கள்.
மொட்டைச்சாமியாரே
ஒரு கோயிலின் தலைமைப் பூசாரிதான். ஆனாலும் அவர் இன்னொரு கோயிலில் சாராயம் வினியோகிக்கப்
பட்டதை கண்டு கொள்ளவில்லை. அவர் கோயிலிலும் அது சகஜமோ என்னமோ?
No comments:
Post a Comment