தொழிற்சங்க இயக்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நேற்று வெற்றிகரமாய் தொடங்கியுள்ளது.
வேலை நிறுத்தத்தை முன்னிட்டு நாடெங்கிலும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் என்று ஆவேச இயக்கங்களும் எழுச்சிகரமாக நடந்துள்ளன.
கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தின் சிறப்பான துவக்கத்தினால் போராட்ட எதிரிகளுக்கு வழக்கம் போல வயிற்றெரிச்சலும் தொடங்கி விட்டது.
ஐய்யப்பனின் பெயரைச் சொல்லி வாரத்திற்கு மூன்று நாள் கதவடைப்பும் கல்லெறிதலும் செய்யும் காவிகளுக்கு எந்த உபதேசம் செய்ய முன்வராத பேர்வழிகள் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவச உபதேசம் கொடுக்க ஓடி வந்து விடுகிறார்கள்.
உற்பத்தி குறையுமாம், தொழில் முடங்குமாம், நுகர்வோருக்கு அவதியாம்,
ஆமாம், செல்லா நோட்டு என்று அறிவித்த போது மக்களை பிச்சைக்காரர்களாய் தெருவில் அலைய விட்டபோது எங்கே போயிருந்தார்கள் இந்த உபதேசிகள்?
ஜி.எஸ்.டி என்ற பெயரில் இப்போது சிறு தொழில் செய்வோரை முடக்கியுள்ள மோடி அரசுக்கு எதிராக உபதேசிகளின் உபதேசம் என்னவோ?
எல்லாம் சரி
எந்த ஒரு வேலை நிறுத்தமும் விரும்பி மேற்கொள்வதல்ல. மிகப் பெரிய உழைப்பும் திரட்டலும் இல்லாமல் ஒரு மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் சாத்தியமில்லை என்பதெல்லாம் உபதேசிகளுக்கோ அல்லது வேலை நிறுத்தத்தை முறியடிக்க நினைக்கும் கருங்காலிகளுக்கோ தெரியாது.
அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி
இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான அறைகூவல் கடந்த செப்டம்பர் மாதமே கொடுக்கப்பட்டு விட்டது. நாடெங்கிலும் அதற்கான தயாரிப்பு வேலைகளும் நடந்து வருகிறது.
போராடும் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் "மழையில் நனையும் எருமை" போல ஏனய்யா கொஞ்சமும் பொறுப்பில்லாமல் அசமந்தமாய் இருந்தீர்கள் என்று மோடி அரசை ஒரு வார்த்தையாவது கேட்கும் அறம் உங்களுக்கு உண்டா?
இல்லையென்றால் நீங்களும் அந்த எருமைக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பதையாவது ஒப்புக் கொள்ளுங்கள்
மோடி எப்படியும் தர மாட்டான்
ReplyDeleteஅப்புறம் எதுக்கு இந்த போர் ?
ஒரு 5 மாசம் காத்திருக்க முடியாதா ?
எந்த ஒரு பலனையும் தொழிற்சங்க இயக்கம் போராடாமல் பெற்றதில்லை. நாளை காங்கிரஸ் ஆட்சி வந்தாலும் கூட. அதற்கான அடித்தளம் இந்த போராட்டம்.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்.
ReplyDeleteஎங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் வாட்ஸப்பில் அனுப்பிய பின்னூட்டம்
ReplyDelete*சாரி எருமை!*
*******************
*இராமன் வெளிப்படுத்தியிருப்பது தார்மீக கோபம்.*
*ஆனால் உரிமைப் பெருமழைக்கும் அசையாத "எருமை அரசாங்கம்" பற்றி எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு அமைப்பு சார் தொழிற் சங்கங்களுக்கே உண்டு.*
*ஏ.ஐ.ஐ.இ.ஏ இதுவரை உலகமய காலத்தில் நடைபெற்ற 18 வேலை நிறுத்தங்களிலும் பங்கேற்றுள்ளதால் இந்த கோபம் வருகிறது. நியாயம்.*
*ஆனால் அமைப்பு சார் நடுத்தர வர்க்க அமைப்புகள் சில இன்னும் பங்கேற்காமல் இருக்கிறார்களே! அவர்களை என்ன சொல்வது!*
*மக்களுக்கும் அமைப்பு சார் தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான இணைப்பு வலுப்பட வேண்டும். விவசாயிகள் 25 ஆண்டாய் பட்ட பாட்டை அரசாங்கம் கண்டு கொள்ளாதது போல் அமைப்பு சார் நகர்ப்புற உழைப்பாளிகளும் இருந்தனர். அரசாங்கம் " எருமையாய்" இருப்பது அதன் வர்க்க குணம். ஆனால் அந்த ஆளும் வர்க்க சிந்தாந்த ஊடுருவலால் "எருமைத் தனம்" தொற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அமைப்பு சார் தொழிற்சங்கங்களின் கடமை.*
*அகில இந்திய வேலை நிறுத்தங்கள் எருமைக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. இந்த எருமைத் தனத்திற்கு எதிரான போராட்டமுமாகும். 20 கோடி தொழிலாளர்கள் கைகோர்த்து தங்களின் சமூக கடப்பாட்டை களத்தில் நிரூபித்துள்ளார்கள்*
*எருமை ஒரு குறியீடு. பாவம் அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல்களுக்கெல்லாம் அதன் பெயர் பயன்படுத்தப்படுவது. எருமை நம்மை மன்னிக்கட்டும்!*