Thursday, January 10, 2019

*சாரி எருமை!*

"மழையில் நனையும் எருமைகளாய்   என்ற நேற்றைய பதிவிற்கு எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன்   வாட்ஸப்பில் அனுப்பிய பின்னூட்டம்



*சாரி எருமை!* 
*******************

*இராமன் வெளிப்படுத்தியிருப்பது தார்மீக கோபம்.* 

*ஆனால் உரிமைப் பெருமழைக்கும் அசையாத "எருமை அரசாங்கம்" பற்றி எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு அமைப்பு சார் தொழிற் சங்கங்களுக்கே உண்டு.* 

*ஏ.ஐ.ஐ.இ.ஏ இதுவரை உலகமய காலத்தில் நடைபெற்ற 18 வேலை நிறுத்தங்களிலும் பங்கேற்றுள்ளதால் இந்த கோபம் வருகிறது. நியாயம்.* 

*ஆனால் அமைப்பு சார் நடுத்தர வர்க்க அமைப்புகள் சில இன்னும் பங்கேற்காமல் இருக்கிறார்களே! அவர்களை என்ன சொல்வது!*

*மக்களுக்கும் அமைப்பு சார் தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான இணைப்பு வலுப்பட வேண்டும். விவசாயிகள் 25 ஆண்டாய் பட்ட பாட்டை அரசாங்கம் கண்டு கொள்ளாதது போல் அமைப்பு சார் நகர்ப்புற உழைப்பாளிகளும் இருந்தனர். அரசாங்கம் " எருமையாய்" இருப்பது அதன் வர்க்க குணம். ஆனால் அந்த ஆளும் வர்க்க சிந்தாந்த ஊடுருவலால் "எருமைத் தனம்" தொற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அமைப்பு சார் தொழிற்சங்கங்களின் கடமை.*

*அகில இந்திய வேலை நிறுத்தங்கள் எருமைக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. இந்த எருமைத் தனத்திற்கு எதிரான போராட்டமுமாகும். 20 கோடி தொழிலாளர்கள் கைகோர்த்து தங்களின் சமூக கடப்பாட்டை களத்தில் நிரூபித்துள்ளார்கள்* 

*எருமை ஒரு குறியீடு. பாவம் அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல்களுக்கெல்லாம் அதன் பெயர் பயன்படுத்தப்படுவது. எருமை நம்மை மன்னிக்கட்டும்!*

No comments:

Post a Comment