Monday, January 21, 2019

போட்டோஷாப்பிற்கு இஸ்லாம் தோஷமில்லை


காவிகளைப் போல மோசடிப் பேர்வழிகள், வெட்கம் கெட்டவர்கள், அடுத்தவர் சாதனையை தங்களுடையது என்று காண்பித்துக் கொள்ள கூசாதவர்கள் என்பதற்கு இன்னும் ஒரு சான்று கிடைத்துள்ளது.

அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவிற்காக மொட்டைச் சாமியார் செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகளை பாரீர் என்று சங்கிகளின் பொய்களைப் பரப்புவதற்கென்றே உள்ள "போஸ்ட்கார்ட்" இணைய தளம் ஒரு படத்தை வெளியிடுகிறது.  






அவ்வளவுதான் அதை வைத்துக் கொண்டு ஆளாளுக்கு அந்த படத்தை பகிர்ந்து கொண்டு மொட்டைச் சாமியார் புகழைப் பரப்புகிறார்கள்.

கெட்டிக்காரனின் புளுகிற்கே இரண்டு நாட்கள் என்கிற போது மோசடிப் பேர்வழிகளின் புளுகு மட்டும் எவ்வளவு நாள் தாங்கும்?

வழக்கம் போல இந்த படத்தின் மர்மமும் அம்பலமாகி விட்டது. 

படத்தில் உள்ளது அலகாபாத்தே கிடையாது. அது மெக்கா.  ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபிய அரசு செய்துள்ள ஏற்பாடுகளின் புகைப்படம். 



தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த ஹஜ் யாத்ரீகர்கள் பதிவு செய்த புகைப்படத்தை அப்படியே அலகாபாத் என்று மாற்றி விட்டார்கள்.

காவிகள் எப்போதுமே இஸ்லாமை வெறுப்பார்கள். ஆனால் போட்டோஷாப் மோசடி செய்வதற்கு மட்டும் இஸ்லாம் தோஷம் இல்லை போலும்!

6 comments:

  1. புகைப்படம் எடுத்தல் , சித்திரம் வரைதல் , இசை எல்லாம் இஸ்லாமில் மிக தீவிரமான ஹராம் ( தடை ). அவை காபிர்களின் செயல்பாடு. இசை கலைஞர்கள் முகம்மது காலத்தில் தலைவெட்டிய வரலாறுகள் உண்டு
    இன்று அந்த காபிர்களின் செயல்பாடு எல்லாம் ஹலால் ஆகி இஸ்லாமிய முல்லாக்கள் பயன்படுத்தும் போது

    இவை கூட தோஷம் இல்லாமல் ஆகிவிடும்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. ஐய்யா, அனானி நீங்க என்ன சொல்ல வரீங்க> இந்த பதிவுக்கும் உம்ம பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? அபத்தமா சொல்ற விஷயங்களுக்கு ஆதாரம்தான் உண்டா? மோடி வகையறாக்களோட இஸ்லாமிய எதிர்ப்பு, போட்டோஷாப் மோசடி பற்றி பதில் சொல்ல துப்பு கிடையாது என்ற ஒப்புக் கொள்ளும் நேர்மையும் கிடையாது

      Delete
  2. இந்த கும்பலின் திருகுதாளங்களை படிக்கும் போது செம காமடியாக உள்ளது

    ReplyDelete
  3. நான் சொன்னது தங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கின்றேன்

    இந்த மாதிரியான போட்டோ ஷாப் சரி என்று நான் சொல்லவேயில்லை . இதே மாதிரியான போட்டோ ஷாப் வேலைகளை இஸ்லாமிய கும்பலும் உலகளாவிய முறையில் செய்கின்றார்கள் .. ஆதாரம் தரலாம்

    ஆனால் யார் செய்தாலும் தவறே ... உங்களை போல் கம்யூனிஸ்ட் செய்தால் சரி .. ஏனையவர்கள் செய்தால் குற்றம் என்று சொல்ல போவதேயில்லை

    யார் செய்தாலும் தவறே தவறே தவறே

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் ஒரு அபத்தமான பின்னூட்டம். இஸ்லாமிய வெறுப்பு உங்களை அப்படி பேச வைக்கிறது. கம்யூனிஸ்டுகள் காவிகளைப் போல மோசடி வேலைகளை எப்போதும் செய்வதில்லை.

      Delete