இந்து
சேனா என்றொரு காவிகளின் ரவுடி கோஷ்டி (தோழர் சீதாராம் யெச்சூரியை தாக்க வந்தவர்களை
வேறெப்படி அழைப்பது?) சில தினங்கள் முன்பாக விக்டோரியா ராணியின் நினைவு தினத்தை கொண்டாடியுள்ளது.
1857 ல் இங்கிலாந்து அரசாங்கம் இந்திய ஆட்சியை நேரடியாக
தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஆணையை விக்டோரியா ராணி பிறப்பித்த காரணத்துக்காக
அவரது நினைவு நாளை கொண்டாடுகிறார்களாம். அது மட்டுமல்லாது அந்த ஆணை போடப்பட்ட நாள்தான்
இந்தியாவின் முதல் சுதந்திர தினமாம்.
இங்கிலாந்து
அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்கு இந்தியா வந்தது இந்தியாவின் அடிமைத்தனத்தை உறுதி செய்த
நாளாக நாம் கருதினால் இவர்களுக்கு அதுதான் முதல் சுதந்திர தினமாம். என்னே விஸ்வாஸம்!
அதற்கு
என்ன காரணம் சொல்கிறார்கள்?
பிரிட்டிஷ்
கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததன் மூலம் இந்தியாவிற்கு விக்டோரியா ராணி இஸ்லாமிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்து
விட்டாராம். அதனால் முதல் சுதந்திர தினமாம்.
அடப்பாவிகளா?
1857
க்கு முன்பாக கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் பிரிட்டிஷ்
ஆட்சி இந்தியாவை ஆண்டது அவர்களுக்குத் தெரியுமா?
அக்காலக்கட்டத்தில்
இந்திய செல்வங்களைக் கொள்ளையடித்து விக்டோரியா ராணியின் தேசத்திற்குத்தான் எடுத்துச்
சென்றார்கள் என்பது அவர்களுக்கு தெரியுமா?
வீர
பாண்டிய கட்டபொம்மனும் மருது சகோதரர்களும் பூலித்தேவனும் யாருடைய ஆட்சிக்கு எதிராக
போராடினார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா?
திப்பு
சுல்தான் யாருடைய ஆட்சிக்கு எதிராக போரிட்டார் என்பது அவர்களுக்குத் தெரியுமா?
1806
ல் வேலூரில் சிப்பாய் புரட்சி யாருக்கு எதிராக நடந்தது என்று தெரியுமா?
அவர்கள்
சொல்லும் 1857 லேயே வட இந்தியா முழுதும் சுதந்திரப் போராட்டம் நடந்ததே அது யாருக்கு
எதிராக என்று அவர்களுக்கு தெரியுமா?
இந்து
முஸ்லீம் சிப்பாய்கள் தொடங்கி வைத்த புரட்சியை நானாசாஹிப், ஜான்சிராணி ஆகியோர் முன்னெடுத்துச்
சென்றது யாருக்கு எதிராக என்று அவர்களுக்கு தெரியுமா?
விக்டோரியா
ராணியின் படைகளால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான சிப்பாய்களும் பொது மக்களும் எந்த மதத்தினர்
என்பது அவர்களுக்குத் தெரியுமா?
முதல்
சுதந்திரதினம் என்று அவர்கள் அழைக்கும் நாளுக்குப் பிறகு அந்த சுதந்திரத்தைப் பெற்றுக்
கொடுத்தவர்கள் இந்திய மக்களுக்கு தொன்னூறு ஆண்டுகள் இழைத்த கொடூரங்கள் பற்றி ஏதாவது
தெரியுமா?
ஜாலியன்
வாலாபாக் கொடூரம் நிகழ்ந்தது அவர்களின் முதல் சுதந்திர தினத்திற்குப் பிறகுதான் என்பதாவது
அவர்களுக்குத் தெரியுமா?
தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. காவிகளுக்கு போராட்ட வரலாறு என்பது கிடையாது. சுதந்திரப் போராட்டத்தை
காட்டிக் கொடுத்த கறைபடிந்த வரலாறு என்பதுதான் இருக்கிறது.
அதனால்தான்
மோடி தொடங்கி அனைத்து காவிகளும் வரலாற்றை அபத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்,
அடிமைத்தனத்தை
பெருமிதமாகக் கருதக் கூடிய அளவிற்கு காவிகளின் புத்திசாலித்தனம் இருப்பது மெய் சிலிர்க்க
வைக்கிறது.
முதலில்
வரலாற்றைப் படிங்கடா, அப்புறமா விழாவெல்லாம் எடுக்கலாம்.
பின்
குறிப்பு:
நாளை
குடியரசு தினம். சட்டையில் கொடியை தலை கீழாக
குத்திக் கொண்டு காவிகள் பல பேர் அலைவாங்களே என்று நினைக்கும் போதே அச்சமாக இருக்கிறது.
Still sangis have not accepted the tricolour flag as national flag of india. Then how you can expect this from them.
ReplyDeleteStill sangis have not accepted the tricolour flag as national flag of india. Then how you can expect this from them.
ReplyDelete