அஜித் நடித்த விஸ்வாஸம் படத்திற்கு நேற்று சென்றிருந்தோம். வீரம் படத்திற்குப் பிறகு பார்த்த அஜித் படம். கிட்டத்தட்ட வீரம் படத்தையே கொஞ்சம் பட்டி டிங்கரிங்க் (வார்த்தைப் பிரயோகத்திற்கு தோழர் சாய் ஜெயராமனுக்கு நன்றி) பார்த்து விஸ்வாஸமாக கொடுத்துள்ளார் இயக்குனர் சிவா.
கேரக்டர்கள் பெயர், லொகேஷன், வில்லன் பழி வாங்குவதற்கான காரணம் இதெல்லாம் கொஞ்சம் மாற்றி பிரிந்து போன கணவன் மனைவி குழந்தை செண்டிமெண்ட் அவ்வளவுதான் மாற்றம்.
கிராமத்து திருவிழா, அனல் பறக்கும் சண்டைகள், சிரிப்பு வராத காமெடி, நல்லதாய் கொஞ்சம் நயன் தாரா நடிப்பு, ஓவர் பில்ட் அப்பில் அஜித், எரிச்சலூட்டும் வில்லன், பெரும்பாலும் இரைச்சலான பாடல்கள், கண்ணான கண்ணே என்று ஒரு நல்ல பாட்டு, ஓகே என்று சொல்லும் அளவில் பின்னணி இசை, கிராமத்து அழகை படம் பிடித்துள்ள ஒளிப்பதிவு - இவ்வளவுதான் விஸ்வாஸம்.
பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள் என்ற கருத்தோடு முடிகிற இந்த படத்திற்கு ஏன் விஸ்வாஸம் என்று பெயர்?
படம் ரிலீஸாகி ஐந்து நாட்களுக்குப் பிறகு போனாலும் ரசிகர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. ஏதோ அஜித் அறிமுகக் காட்சி, பஞ்ச் டயலாக் என்று மூன்று நான்கு சீன்களில் கத்தினால் பரவாயில்லை. ஒவ்வொரு காட்சியிலும் கத்துவதெல்லாம் ஓவரய்யா! தொண்டையே வரண்டு போயிருக்கும்.
இப்படி கத்திக்கிட்டே இருந்தீங்கன்னா கடைசி வரைக்கும் அஜித்திற்கு சிவாவிடமிருந்து விடுதலை கிடைக்கப் போவதில்லை. உங்க தல ஒரு சிறந்த படத்தில் நடித்து பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கும் கிடைக்கப் போவதில்லை.
பிகு: இன்று பேட்ட படத்திற்கு வேறு ரிசர்வ் செய்துள்ளது. ரஜனி ரசிகர்கள் என்ன படுத்தப் போகிறார்களோ?
நாங்கள் ரொம்ப நல்லவர்கள் தோழர். ரசிப்பது மட்டுமே உண்டு
ReplyDeleteநிம்மதியாக பேட்ட போகலாம்
ReplyDeleteபெரிதாக கூட்டம் இருக்காது
அப்படி வந்தாலும் ரஜினியின் பென்ஷன் வாங்கிய ரசிகர்கள் வருவார்கள் . நிம்மதியாக நீங்க படம் பார்க்கலாம்
விசுவாசத்தில் சில சமூக பொறுப்பான விடயங்கள் உண்டு
குறிப்பாக அவசர நேரத்தில் கூட பெல்ட் அணியும் கதாநாயகன்
கெல்மேட் போட்டு பயணம் செய்யும் கதா நாயக/நாயகி
பெண்ணின் ஆளுமையை மதிக்கும் நாயகன்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteinteresting post sir
ReplyDelete