Sunday, July 8, 2018

கொலையாளிகளை கௌரவிப்பது காவிப்பாரம்பரியம்


கடந்த வருடம் ஜார்கண்ட் மாநிலத்தில் மாடுகளை கடத்துவதாக ஒரு இஸ்லாமியர் கொல்லப்பட அந்த கொலையாளிகள் கைது செய்யப்பட்டு விரைவு நீதி மன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்க அவர்கள் நேரே சென்றது மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா  வீட்டிற்குத்தான். அவரும் இந்த கொலையாளிகளுக்கு மாலை அணிவித்து கௌரவம் செய்துள்ளார்.

இதனை பலரும் கண்டித்துள்ளனர். 

இதிலே அதிர்ச்சியடைய ஏதும் இல்லை.

காந்தியடிகளின் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த சவார்க்கருக்கு நாடாளுமன்றத்திலேயே படம் வைத்த கட்சி பாஜக.

உத்திரப் பிரதேசம் முசாபர்நகரில் கலவரத்தைத் தூண்டி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த எம்.எல்.ஏ க்கள் சங்கீட் சோமிற்கும் சுரேஷ் ராணாவிற்கும் மாலை அணிவித்து மலர் கிரீடம் அணிவித்து பாராட்டினார்கள். இந்த கூட்டத்தில் திருவாளர் மோடியும் கலந்து கொண்டிருக்கிறார்.

மாட்டுக்கறி வைத்திருந்ததாக வதந்தியை உருவாக்கி உ.பி தாத்ரியில் முகமது அக்லக் என்ற முதியவரை அடித்துக் கொன்ற கொலையாளிகளுக்கு மொட்டைச்சாமியார் என்.டி.பி.சி நிறுவனத்தில் வேலை போட்டுக் கொடுத்து பாராட்டினார்.

அந்த பாரம்பரியத்தை  ஜெயந்த் சின்ஹா தொடர்ந்துள்ளார்.

இதில் அதிர்ச்சிக்கோ ஆச்சர்யத்துக்கோ அவசியமில்லை.

ஏனென்றால்

அவர்கள்

கொலைகார குடும்பத்தார்

Yes,

Saffron Family of Murderers

2 comments: