Monday, July 16, 2018

ஸ்டெரிலைட் ஆட்டம் ஆரம்பமா?

இன்று காலை ஹிந்து நாளிதழில் பார்த்த செய்தி இது.



ஸ்டெரிலைட் நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு திரும்பும்படி அழைத்துள்ளது. ஊழியர் குடியிருப்பிற்கு வருமாறும் அவர்களுக்கான கைரேகை வருகைப் பதிவு இயந்திரம் அங்கே இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு வெறுமனே சம்பளம் தர முடியாது என்றும் அவர்கள் சும்மா இருப்பதை தவிர்க்க வேறு பணிகள் அளிக்கப்போவதாகவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அச்செய்தி சொல்கிறது.

உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள வேறு என்ன மாற்று வேலை தர முடியும்? 

தொழிற்சாலையை மீண்டும் திறக்கும் சதியின் முதல் கட்டமா இது?

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம்.

வேதாந்தா - மோடி - எடுபிடி  திருட்டுக் கூட்டணி என்ன வேண்டுமானாலும் செய்யும் . . .

1 comment:

  1. ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து, வரும் 18.07.2018 அன்று விசாரணை நடைபெற உள்ளது. இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் திரு.பாலி நாரிமன், திரு.கபில் சிபல் போன்ற மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கு நடத்துமாறு கோருகிறோம்.

    ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கிய நிலத்தை திரும்பப் பெற வேண்டுகிறோம். மேலும், கட்டிடச் சான்று. தொழிலாளர் துறைச் சான்று, தீயணைப்புத் துறைச் சான்று உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளையும் தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.
    ஸ்டெர்லைட்டினால் மக்களுக்கு மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும். நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது என்ற தகவலை பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவிக்க வேண்டும்.
    இரண்டாவதாக, தூத்துக்குடி காவல்துறை போராடிய மக்கள், மக்களுக்கு ஆதரவு தந்தவர்கள் என பலரையும் பிடித்து நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் போட்டு வருகிறது. எங்கள் கிராமம் உட்பட அனைத்துக் கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் யாரும் ஊரில் இல்லை. மூளைச் சலவை செய்து விட்டார்கள் என்ற வதந்தி பரப்பப் படுகிறது. நாங்கள் மக்களாகச் சேர்ந்துதான் போராடினோமே தவிர, எங்களை யாரும் மூளைச் சலவை செய்யவில்லை. எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர், காவல்துறையின் மிரட்டலால் பொய் மனுக்கள் அளிக்கின்றனர். உண்மையில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், முழுக்க முழுக்க மக்கள் போராட்டம்.

    தொடர்ந்து போராடிய எங்களுக்கு ஒட்டு மொத்த தமிழக மக்கள், உலகத் தமிழர்கள், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் உட்பட பலரும் ஆதரவு அளித்தார்கள். முக்கியமாக திருவாளர்கள் ஸ்டாலின், வைகோ, இராமதாஸ், திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், விஜயகாந்த், கமல், சரத்குமார் ஆகியோரும் தமிழகம் முழுவதும் உள்ள பல அமைப்புகளும் இந்த ஆதரவில் உள்ளடக்கம். கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் திரு.வாஞ்சிநாதன், அரி ராகவன், தேடப்படும் வழக்கறிஞர்கள் இராஜேஸ், அப்துல் நிஜாம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் எங்களுக்கு சட்ட உதவிகள் செய்தனர்.
    உண்மைகள் இவ்வாறிருக்க தற்போது ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கள் கிராமம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

    ReplyDelete