Wednesday, July 4, 2018

அழிவை நெருங்குது எடுபிடி வகையறா

ஒருத்தரும் போகலை. எதுக்கு ரோஷம்?





ஒகி புயல் பாதிப்பின் போது தமிழக அரசு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டிருந்தது. கேரள முதல்வர் தோழர் பிணராயி விஜயன் கடற்படையோடு பேசி கடலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணிகளை முடுக்கி விட்ட போது எடுபிடியும் அதர்ம யுத்தமும் கோயில் கோயிலாக மாலை போட்டுக் கொண்டு சிறப்பு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தார்கள்.

இந்தியாவின் பிரதமர் என்று ஊடகங்களால் அழைக்கப்படுகிற மனிதரோ புயல் சேதங்களின் புகைப்படங்களைப் பார்க்க ஒரு மாதத்திற்கு பிறகு வந்தார். இதிலே அந்த புகைப்படங்கள் வைத்திருந்த ஸ்டாண்டுகளுக்கு மலர் அலங்காரம் செய்து அழகு பார்த்தார்கள். 

தங்களுக்கு உதவி புரிய அரசும் வரவில்லை, கடற்படையும் வரவில்லை என்ற ஆதங்கத்தை, குமுறலை, கோபத்தை மீனவ மக்கள் ஒருத்தரும் வரேல என்ற ஆவணப் படத்தில்  பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த உண்மையை வெளிக் கொண்டு வந்ததற்காக, அதை ஆவணப் படுத்தியதற்காக ஆவணப் பட இயக்குனர் தோழர் திவ்ய பாரதி அவர்களை கைது செய்ய எடுபிடியின் ஏவல் துறை துடிக்கிறது.

அவர் வீட்டை சூழ்ந்திருக்கிறார்கள், திருடர்கள் போல காம்பவுண்ட்  சுவர் ஏறி குதிக்கிறார்கள். ரௌடிகள் போல வாகன சாவியை பறிக்கிறார்கள்.

இதெல்லாம்தான் போராட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் எடுபிடி உத்தி போல. 

ஓக்கி புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீங்கள் யாரும் உடனடியாக செல்லவில்லை. உதவவில்லை. 

இதுதான் உண்மை.

இதைச் சொன்னால் உமக்கேனய்யா வெட்டி ரோஷம்?

அழிவதற்கான அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது எடுபிடி அரசு.

இந்த கையாலாகத கயமைத்தனத்தை வன்மையாகக் கண்டிப்போம். 

No comments:

Post a Comment