தூத்துக்குடி
ஸ்டெரிலைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் சங்கத்தின்
சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வு குறித்து இரண்டு நாட்கள் முன்பாக எழுதி
இருந்தேன். காவல்துறை இடையூறு இருக்காது என்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால்
அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.
நிகழ்ச்சி
ஒரு அரங்கத்திற்குள் நடைபெற்ற நிகழ்ச்சி. அந்த கல்யாண மண்டபத்தின் முகப்பில் எங்கள்
சங்கத்தின் செந்தோரணங்களும் கொடிகளும் கட்டப்ப்பட்டிருக்கிறது. இரவில் அங்கு வந்த காவலர்கள்,
தோரணங்களை பிய்த்துப் போட்டுள்ளார்கள், கொடிகளை அகற்றி உள்ளார்கள். அது மட்டுமல்லாது
மண்டபத்தின் உரிமையாளரையும் தொலைபேசியில் மிரட்டியுள்ளார்கள்.
நெல்லைக்
கோட்டச்சங்கத்தின் தலைவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் காவல்துறை உயரதிகாரிகளோடு பேசி, என்ன விளைவானாலும்
திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும் என்று உறுதிபடத் தெரிவித்த பின்னர் காவல்துறை, விஷயம்
தெரியாத கீழ் மட்ட அதிகாரிகள் செய்த வேலை என்று
பம்மி விட்டது.
தூத்துக்குடி
துப்பாக்கிச்சூடு என்று யாருமே வாய் திறக்கக் கூடாது என்பதுதான் அரசாங்கத்தின் எண்ணம்.
யாரும் நினைவுபடுத்தா விட்டால் காலப்போக்கில்
மக்களே மறந்து விடுவார்கள் என்று கருதி வாய்ப்பூட்டு போட நினைக்கிறது.
புயலுக்கு
பூட்டு போட நினைக்கும் மூடத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.
காவல்துறையிடம்
ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க வேண்டும்.
உங்கள்
அராஜகங்கள் பற்றி எங்கள் மனதுக்குள் பேசிக் கொள்ளவாவது அனுமதி உண்டா சார்?
அதற்குக்
கூட தடை போடுவீங்களா ஐயா?
பின்
குறிப்பு : நிகழ்ச்சி பற்றி தனியாக எழுத வேண்டும் . . .
வாழ்த்துக்கள் போலீஸ்காரரே
ReplyDeleteசூப்பர் அனானி
நீ என்ன எடுபிடி எடப்பாடியின் எடுபிடியா?
Deleteபோலீஸ் உன்னைப்போன்ற கிரிமினல்களையும்
ஒரு நாள் சுட்டுக் கொல்லும்.
அப்போது உன் குடும்பம் போலீசிற்கு வாழ்த்து சொல்லும்
Deleteஇவனுகள ஈசீயா ஆப்படிக்கலாம். ஆண்டாள்ல பத்தி ஏதாவது சொன்னா இவனுக உன்னாவிரதம், போராட்டம், மறியல்னு ஆரம்பிப்பானுக. அதுல நம்மாலுக நாலுபேர விட்டு கலகம் செய்யவிட்டு போலிசவிட்டு குறிபாத்து சுட சொல்லவேண்டும்.
Deleteஐடியா உபயம்: மைலாப்பூர் மாபியா
இவ்வளவு கேவலமான புத்தி இருக்கறவன் அவனையே சூப்பர்னு சொல்லிக்கறான். இவனையெல்லாம் கல்லால அடிச்சே சாவடிக்கனும்
Delete