ஸ்டெரிலைட்டிற்கு எதிரான போராட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தினரின் கல்விக்கு உதவ நிதியளிக்குமாறு எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது.
அப்படி தமிழகமெங்கும் உள்ள அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்கள் அளித்த நிதியை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அளிக்கும் நிகழ்ச்சி நாளை தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது.
அந்நிகழ்ச்சியில் எங்கள் கோட்டத்தின் சார்பில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன்.
குறைந்தபட்சம் இந்த நிகழ்ச்சியாவது காவல்துறை குறுக்கீடு இல்லாமல் நடைபெறும் என்று நம்புகிறேன்.
https://www.vinavu.com/2018/07/16/beijings-brutal-eviction-documentary/
ReplyDeleteMr Raman Please go through the link pasted. Give your feed back. Why I am asking this feedback? Because,I love to read your blogs daily.
https://www.vinavu.com/2018/07/16/beijings-brutal-eviction-documentary/
ReplyDeleteஇந்த பதிவு பற்றி தங்கள் கருத்து
சூப்பர் அனானி
வினவு போன்ற அகில உலக தீவிரப் புரட்சியாளர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் பற்றியெல்லாம் கருத்து கூறுவதாக இல்லை
Deleteஅப்போ சீனா அப்பாவி ஏழை தொழிலாளர்களை அடிச்சு துரத்துவது தப்பே இல்லை என்று சொல்லுறீங்க
Deleteஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து, வரும் 18.07.2018 அன்று விசாரணை நடைபெற உள்ளது. இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் திரு.பாலி நாரிமன், திரு.கபில் சிபல் போன்ற மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கு நடத்துமாறு கோருகிறோம்.
ReplyDeleteஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கிய நிலத்தை திரும்பப் பெற வேண்டுகிறோம். மேலும், கட்டிடச் சான்று. தொழிலாளர் துறைச் சான்று, தீயணைப்புத் துறைச் சான்று உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளையும் தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.
ஸ்டெர்லைட்டினால் மக்களுக்கு மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும். நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது என்ற தகவலை பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவிக்க வேண்டும்.
இரண்டாவதாக, தூத்துக்குடி காவல்துறை போராடிய மக்கள், மக்களுக்கு ஆதரவு தந்தவர்கள் என பலரையும் பிடித்து நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் போட்டு வருகிறது. எங்கள் கிராமம் உட்பட அனைத்துக் கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் யாரும் ஊரில் இல்லை. மூளைச் சலவை செய்து விட்டார்கள் என்ற வதந்தி பரப்பப் படுகிறது. நாங்கள் மக்களாகச் சேர்ந்துதான் போராடினோமே தவிர, எங்களை யாரும் மூளைச் சலவை செய்யவில்லை. எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர், காவல்துறையின் மிரட்டலால் பொய் மனுக்கள் அளிக்கின்றனர். உண்மையில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், முழுக்க முழுக்க மக்கள் போராட்டம்.
தொடர்ந்து போராடிய எங்களுக்கு ஒட்டு மொத்த தமிழக மக்கள், உலகத் தமிழர்கள், தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் உட்பட பலரும் ஆதரவு அளித்தார்கள். முக்கியமாக திருவாளர்கள் ஸ்டாலின், வைகோ, இராமதாஸ், திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், விஜயகாந்த், கமல், சரத்குமார் ஆகியோரும் தமிழகம் முழுவதும் உள்ள பல அமைப்புகளும் இந்த ஆதரவில் உள்ளடக்கம். கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் திரு.வாஞ்சிநாதன், அரி ராகவன், தேடப்படும் வழக்கறிஞர்கள் இராஜேஸ், அப்துல் நிஜாம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் எங்களுக்கு சட்ட உதவிகள் செய்தனர்.
உண்மைகள் இவ்வாறிருக்க தற்போது ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கள் கிராமம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.