Monday, July 2, 2018

கடமை தவறி விட்டு வரியும் விதிப்பீர்களா????



மூடர்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார் மோடி. 

சாமானிய மக்களின் முதுகெலும்பை முறித்து விட்டு அதனை சாதனையாகக் கருதி விழா கொண்டாடும் இரக்கமற்ற அரக்கர்களின் ஆட்சியே மோடி ஆட்சி.

ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் மக்களுக்கு எந்த வித பயனும் இதுநாள் வரை கிடைக்கவில்லை. விலைவாசி உயர்ந்து கொண்டுதான் இருக்கிறதே தவிர கொஞ்சமும் குறையவில்லை. அரசின் கஜானாவில் உள்ள தொகைதான் உயர்ந்துள்ளது. அந்த பணம் மாநிலங்களுக்கும் செல்லவில்லை. மக்களுக்கும் செல்லவில்லை. நம்மிடமிருந்து திரட்டப்பட்ட இதர வரிகள் எப்படி அம்பானி, அதானி வகையறாக்களுக்கு தாரை வார்க்கப் படுகிறதோ, அது போலவே ஜி.எஸ்.டி மூலம் திரட்டப்படும் பணமும் சென்று விடும்.

பல பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் குறைக்கப் பட்டுள்ளது என்பதே ஜி.எஸ்.டி அவசரகதியில் எவ்வித யோசனையோ, திட்டமிடலோ இல்லாமல் கொண்டு வரப்பட்ட அறைகுறை திட்டம் என்பதற்கான சான்று.

ஆயுள் காப்பீட்டு பிரிமியத்திற்கு  ஜி.எஸ்.டி வரி விதிப்பதைப் போன்ற அநியாயம் எதுவும் கிடையாது.

தன்னுடைய குடிமக்களுக்கு எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது ஒரு அரசின் கடமை.

அரசு அக்கடமையிலிருந்து தவறுகையில் மக்கள் தங்கள் உழைப்பின் மூலம் கிடைக்கும் ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை சேமித்து ஆயுள் காப்பீடு செய்து கொள்கிறார்கள்.

அந்த சேமிப்பிற்கு பதினெட்டு சதவிகித ஜி.எஸ்.டி என்பது மிகப் பெரிய அநீதியாகும்.

சுமார் நாற்பது லட்சம் மக்கள், ஆயுள் காப்பீட்டு சேவைகள் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும் என்று கையெழுத்திட்டு மனு அளித்துள்ளனர். 

அந்த மக்கள் கருத்தை தொடர்ந்து புறக்கணித்து வருவதே மோடி அரசின் ஜனநாயக விரோத அணுகுமுறையை நிரூபிக்கிறது.

நம்முடைய சேமிப்பின் மீது வரி விதித்து அதனை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுக்கிற இந்த ஒரு அம்சம் மட்டும் போதும், அடுத்த தேர்தலில் மோடியை நாம் கண்டிப்பாக வீழ்த்த வேண்டும் என்று உரக்கச் சொல்ல. 

No comments:

Post a Comment