தாங்கள்
என்னவோ மிகப் பெரிய யோக்கியர்கள் போல வேடம் போடுகிற கல்யாண் ஜ்வெல்லர்ஸ், ஹிந்திய்ல்
அமிதாப் பச்சனை வைத்தும் தமிழில் பிரபுவை வைத்தும் வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் வங்கி
ஊழியர்களையும் அதிகாரிகளையும் கொச்சைப் படுத்தியிருந்தது.
வங்கி
அதிகாரிகள் சங்கத்தின் கடுமையான எதிர்வினைக்குப் பிறகு அந்த விளம்பரம் யாரையும் புண்படுத்தும்
எண்ணம் எங்களுக்கு கிடையாது என விளக்கம் அளித்தது.
அந்த
விளம்பரம் திரும்பப் பெற வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். திருச்சூரில்
ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வங்கி அதிகாரிகளின் போராட்டம் நியாயமா என்று பிஸினஸ்லைன்
ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. ஆம் நியாயம் என்று 58 % பேர் சொன்னார்கள்.
இறுதியில்
அந்த விளம்பரத்தை திரும்பப் பெறுவதாய் கல்யாண் ஜ்வல்லர்ஸ் எழுத்து பூர்வமாக அறிவித்தது.
ஆனால்
தமிழில் பிரபு நடித்த அந்த விளம்பரம் இன்னும் வெளி வந்து கொண்டுதான் இருக்கிறது.
திரும்பப்
பெறுவதாக சொல்லி விட்டு இன்னும் திரையிடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!
இவர்கள்
நம்பிக்கை, நேர்மை என்றெல்லாம் கதைக்கிறார்கள்!
மோடியிடம்
கற்றுக் கொண்ட பாடமோ?
All the bank employees should not purchase anything from Kalyan jewellers for the advt they have released and i also condemn Actor Prabhu for agreeing to do this AD.
ReplyDelete