Friday, July 6, 2018

ஓவரா போறாங்க!!! ஒழியப் போறாங்க. . .

எடுபிடி அரசாங்கத்தின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சரஸ்வதி சபதம் படத்தில் யானை மாலை போட்டதால் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்தியவர் அரசியானது போல, திடீர் அதிர்ஷ்டத்தால் முதல்வரானவர் எடுபிடி.

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த மோடியோடு திருட்டுக் கூட்டு வைத்திருப்பதால் மோடியின் அத்தனை கயமைத்தனங்களும் எடுபிடியிடமும் அப்படியே பிரதிபலிக்கிறது.

ஏவல்துறையை வைத்துக் கொண்டு செய்யும் அராஜகம் தினம் தினம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

நேற்று கோவையில் நடந்த அராஜகத்தைப் பாருங்கள்.

தீக்கதிர் செய்தி கீழே உள்ளது.

சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்த நகலை கோரிய சிபிஎம் தலைவர் கைது




கோயம்புத்தூர், ஜூலை 5-

கோவை மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்த நகலை கோரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினரும், கோவை மாமன்றத்தின் முன்னாள் மண்டலத் தலைவரு மான சி.பத்மநாபன் கைது செய்யப் பட்டார்.

கோவை மாநகரில் குடிநீர் விநியோகம் செய்ய ரூ.3,150 கோடிமதிப்பீட்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தசூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டபல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சி.பத்மநாபன் வியாழனன்று சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்த நகலை வெளியிடக்கோரி மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயனை நேரில் சந்தித்து மனு அளித்தார். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த நகலை வெளியிட மறுத்ததுடன், ஆணையர் விஜய கார்த்திகேயன் முறையற்ற வகையில் பதிலளித்துள்ளார். 

இதனையடுத்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து பத்மநாபன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சி.பத்மநாபனுடன், உக்கடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு நிர்ப்பந்தித்தனர். ஆனால் ஒப்பந்த நகலை மாநகராட்சி நிர்வாகம் மக்கள் பார்வைக்காக வெளியிட வேண்டும். அதுவரை மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை தொடரப் போவதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து சி.பத்மநாபனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதன்பின் அவர் உக்கடம் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா மற்றும் கட்சி ஊழியர்கள், சிஐடியு தொழிலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப் பான சூழல் ஏற்பட்டது.

எடுபிடி அரசு இப்படி ஓவராகச் செல்வது ஒரேயடியாக ஒழிந்து போகத்தான். 

1 comment:

  1. yes. no transparent. fully commission projects.

    pl give your videw about this (worrying) news also.

    http://www.revmuthal.com/2018/07/lic-idbi-deal-no-sense.html

    ReplyDelete