அந்த நாட்கள்
அந்த மூன்று நாட்களில்
கோயிலுக்குள் செல்வது
தீட்டாகவே இருக்கட்டும் . . .
எந்த மூன்று நாட்களில்
பெண் தெய்வங்கள்
கோயிலுக்குள் இருக்காதெனக்
கொஞ்சம் சொல்லுங்கள்?
- க.பொன்ராஜ்
இதுதான் அந்த கவிதை.
இந்த கவிதையில் என்ன குற்றம் கண்டீர்கள் சங்கிகளே?
"மனைவியை நேசிப்பவர்கள் பிரஸ்டீஜை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்"
என்ற விளம்பர வாசகம் போல
பெண்களை நேசிப்பவர்கள், பெண்களை மதிப்பவர்கள், பெண்களின் வலிகளை புரிந்தவர்கள்
அனைவருக்கும் இந்த கவிதையின் நியாயம் தெரியும்.
வலியும் புரியும்.
சங்கிகள் என்றைக்கு பெண்களை மதித்துள்ளார்கள்? அவர்கள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையே கதற விட்டவர்கள்தானே!
பின் குறிப்பு 1 : மற்ற கார்ப்பரேட் சாமியார்களுக்கும் பங்காரு அடிகளாருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்றாலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் பெண்கள் அந்த மூன்று நாட்களிலும் கூட ஆலயத்துக்குச் செல்ல முடியும், நேரடியாக சிலையைத் தொட்டு வழிபாடும் செய்ய முடியும். அதனால்தான் அந்த படத்தை மேலே வைத்துள்ளேன்.
பின் குறிப்பு 2 ; தெய்வத்தை பழிக்கலாமா என்று கேட்பவர்களுக்கான பதில் அடுத்த பதிவில் . . .
No comments:
Post a Comment