Thursday, July 12, 2018

உண்டியல் குலுக்கிகள்தான் . . .



முதலாளிகளுக்கான கட்சி இல்லை.
முதலாளிகள் யாரும் கூட கட்சியில் இல்லை.
ஏழை எளிய மக்களும் விவசாயிகளும் 
தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும்
மட்டுமே இருக்கிற கட்சி.

முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்பதுமில்லை.
அவர்களிடம் நிதி கேட்டு கெஞ்சுவதுமில்லை.
ஆட்சியில் இருந்த மாநிலங்களிலும் கூட
ஊழல் செய்து கட்சியின் கஜானாவை நிறைத்ததுதில்லை.

ஏழை எளிய மக்களின் கோரிக்கைகளுக்காக
போராடும் கட்சி, அவர்களிடம்தான் நிதி கேட்டு
உண்டியலேந்தி நிற்கும். அவர்கள் தரும்
ரூபாய்களும் சில்லறைகளும்தான் 
என்றுமே நிதியாதாரம்.

எங்களை எள்ளி நகையாட 
உண்டியல் குலுக்கிகள் என்று
அழைக்கலாம்.

அதுதான் எங்களுக்கு பெருமை.
அதுதான் எங்கள் நேர்மையின் அடையாளமும்.

ஆனால் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்.

நீட் தேர்வில் வழக்கு தொடுத்து 196 மதிப்பெண்
பெற்றுத்தந்ததும் ஒரு உண்டியல் குலுக்கிதான்.

எட்டு வழிச்சாலையெனும் பெயரிலே
நிலத்தைப் பறிக்காதே என்று
அன்றாடம் அடிவாங்கி 
கைதாவதும் கூட 
உண்டியல் குலுக்கிகள்தான்.

என் நிலம் ,என் உரிமை என
நாளை நெடும் பயணம் செல்லப்போவதும்
உண்டியல் குலுக்கிகள்தான்.

உண்டியல் குலுக்கிகள் முன்னெடுக்கும்
இயக்கங்களை எட்டிப்பார்க்காதவர்கள்
யாரென்று பாருங்கள். ஏனென்று சிந்தியுங்கள்.

7 comments:

  1. அப்புறம் சார்
    இராமாயண பெருவிழாவுக்கு தாங்கள் போகலையா ?
    போனால் படங்கள் எடுத்து வந்து பதிவுகள் போடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. ராமாயணவிழா என்பது சங்கிகள் நடத்திய வதந்தித்திருவிழா என்று தெளிவான பின்பும் உடன்பிறப்புக்கள் அதையே பிடித்துக் கொண்டு அலைவது ஏன்?

      எட்டுவழிச்சாலை கட்டிங்கை மறைக்கவா?
      அல்லது
      ஸ்ரீரங்கம் பட்டாச்சார்யர்கள் ஆசீர்வாதம் செய்த
      காட்சியிலிருந்து திசை திருப்பவா?

      Delete
    2. தளபதி அவர்கள் கோயிலுக்கு வழிபாடு செய்ய போகவில்லை
      உடன்பிறப்பு ஒருவரின் நிகழவு ஒன்றுக்காக போனார்
      அங்கே பார்ப்பனர்கள் பூசினார்கள் .. அதை தளபதி அந்த இடத்தில் வைத்து அழித்தார்
      இதெல்லாம் பார்ப்பன கம்யூக்களின் கண்ணுக்கு தெரியாது
      விஜய தசமி ஏடு தொடக்கம் செய்தவர் பினராய் vijayan

      Delete
    3. கட்டிங்க்கு ஆதாரம் தர முடியுமா ?

      Delete
    4. உங்கள் மனசாட்சி(அப்படி ஒன்று இருந்தால்)யைக் கேளுங்கள்,
      அது தரும் ஆதாரத்தை.
      எட்டு வழிச்சாலை பற்றிய கள்ள மௌனம் ஏனோ?

      Delete
  2. ஒவ்வொரு முறையும் தேர்தல் பிரச்சாரம் போகும் போதும் கோபாலபுரத்தில் நடக்கிற சிறப்பு வழிபாடுகள் தாங்கள் அறியாததா?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் வல்ல அல்லாஹ் ஆணையாக சொல்கின்றேன்
      எனக்கு அந்த கட்டிங்க் பற்றி எதுவும் தெரியாது

      Delete