இனி இது உலகக் கோப்பை இல்லை.
அரை இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே சென்றுள்ள
ஃபிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய இரண்டு நாடுகளுமே ஐரோப்பிய நாடுகள்தான்.
இன்று நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டிகளில் விளையாடவுள்ள
இங்கிலாந்து,
ஸ்வீடன்,
ரஷ்யா,
க்ரோஷியா
ஆகிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகள்தான்.
ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க கண்டங்களிலிருந்து எந்த ஒரு நாடும் காலிறுதிப் போட்டிக்கே வரவில்லை.
தென் அமெரிக்க நாடுகளான உருகுவே மற்றும் பிரேசில் ஆகியவை நேற்று வீடு திரும்பி விட்டன.
உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக போட்டி துவங்கும் முன்பு கருதப்பட்ட பிரேசில், போர்ச்சுகல், அர்ஜெண்டினா, ஜெர்மனி என யாருமே இப்போது களத்தில் இல்லாமல்
உலகக் கோப்பை இப்போது ஐரோப்பியக் கோப்பையாக சுருங்கி விட்டது.
கடைசி நிமிடங்களில் இரண்டு கோல் அடித்து ஜப்பானை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறி நேற்று பிரேசிலையும் வீழ்த்திய பெல்ஜியம் அணி இந்த முறை உலகக் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாகக் கருதுகிறேன்.
யார் வென்றாலும் மகிழ்ச்சிதான், ..
அந்த வெற்றி நேர்மையானதாக இருந்தால்
மகிழ்ச்சிதான் . . .
சுவாரஸ்யமான பதிவு.
ReplyDelete//உலகக் கோப்பை இப்போது ஐரோப்பியக் கோப்பையாக சுருங்கி விட்டது.//
கால் இறுதிக்கு ஜப்பான், கொரியா,அரேபியா, இரான் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
//யார் வென்றாலும் மகிழ்ச்சிதான்//
மகிழ்ச்சி.
//கடைசி நிமிடங்களில் இரண்டு கோல் அடித்து ஜப்பானை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறி நேற்று பிரேசிலையும் வீழ்த்திய பெல்ஜியம் அணி இந்த முறை உலகக் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாகக் கருதுகிறேன்.//
நானும் உங்க மாதிரியே நினைக்கிறேன். ஆனா நான் பார்த்த தொலைகாட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த விளையாட்டு எக்ஸ்பர்ட்ஸ் ஒருவர் பிரான்ஸ் தான் உலகக் கோப்பையை வெல்வதற்கான சாத்தியம் இருக்கிறது என்று சொன்னார்.
பார்ப்போம்.
சுவாரஸ்யமான போட்டியாக இறுதிப் போட்டி அமைந்தால் மகிழ்ச்சி. பார்ப்போம்
ReplyDeleteஉருகுவே மற்றும் பிரேசில் ஆகியவை South America.
ReplyDeleteஆமாம். அவசரத்தில் மாறியதை மாற்றி விட்டேன்.
Deleteநன்றி