Thursday, July 19, 2018

நெஞ்சை பதற வைத்த அறிவிப்பு













அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் 17.07.2018 செவ்வாயன்று தூத்துக்குடியில் ஸ்டெரிலைட்  ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாற்பது குடும்பங்களுக்கு தலா இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்று வங்கியில் வைப்புத் தொகையாக போடப்பட்டு அதன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் உ.வாசுகி இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவரது உரையை தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதனை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

தூத்துக்குடியில் இன்றளவிலும் கிராமப் புறங்களில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில்நிம்மதியாக தூங்கவில்லை அவர்கள் தினமும் பயத்திலே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் . இதற்கு முக்கிய காரணம் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகும். இன்று வரை மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை வரவில்லை. இந்த கூட்டம் நடைபெறுவது கூட காவல்துறைக்கு வேப்பங்காய் போல் கசந்துள்ளது.

 தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் மற்றும் அதை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்தனர். பின்பு பத்திரிக்கையாளர்கள் படம் பிடிக்க சென்றபோது அனைவரும் பின்புற வாசல் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஓடிவிட்டனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் என மனு கொடுக்க போகிறோம் என்று சொல்லாமல் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என மனு கொடுக்க போகிறோம் என்று பொய் சொல்லி ஆட்களை திரட்டி வந்துள்ளதாகவும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டிய மனு என்பது எங்களுக்கு தெரியாது எனவும் அது தெரிந்த காரணத்தினால் நாங்கள் திரும்பிவிட்டோம் எனவும் கூறினார்கள். 

ஆனால் பலர் மக்கள் விரும்பிக்கிறார்கள் என்று பொய்யான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்ட மாவட்ட ஆட்சியரை வைத்து மூடியது போல் நாடகமாடி தற்போது மீண்டும் திறக்கும் நோக்கில் ஒவ்வொரு நிகழ்ச்சியாக அரங்கேற்றி வருகின்றனர். இந்நாடக நிகழ்ச்சிக்கு கதைவசனம் எழுதியது ஸ்டெர்லைட் கார்ப்பரேட், வடிவம் கொடுப்பது தமிழக அரசு, அதற்கு உதவி மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும், நடிகர்களை தேர்வு செய்வது,அவர்களுக்கு சம்பளம் கொடுத்து நடிக்க அழைத்து வருவது இங்குள்ள பெரும் லாரி உரிமையாளர்கள், மற்றும் அவர்களை சார்ந்த கட்சிகள்.தற்போது சேலம் வழியாக செல்ல பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டுவந்துள்ளது தமிழக அரசு. அது தேசிய பசுமை வழிச் சாலை அல்ல பசுமை அழிச்சாலை 

அந்த நிகழ்ச்சி குறித்து அவரது முக நூல் பதிவையும் இணைத்துள்ளேன்.

இன்சூரன்ஸ் சங்கம் சார்பில் தன் மகளுக்கு கல்வி உதவித் தொகை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சிக்கு பிறகு அந்தப் பெண் என்னோடு பேசினார் - "சிறு தொகைதான் கொடுக்க முடிந்தது என்று ஏன் சொல்லுகிறீர்கள்? மார்ச்சுவரியில் நின்றுகொண்டு அரசு கொடுத்த 20 லட்சத்தை வாங்கும்போதுதான் மனம் கூசியது. ஆனால் சங்கம் கொடுக்கும் இந்த தொகையை மனநிறைவோடு பெற்றுக்கொண்டேன். அப்படிப் பார்த்தால் இது சிறு தொகை அல்லவே அல்ல". மனம் நெகிழ்ந்து போனது.


உதவி பெற்ற இன்னொரு பெண் சொன்னார் - "ரத்த சொந்தங்களை விட வர்க்க சொந்தங்கள் தான் மேலானது என்று நீங்கள் சொன்னது மிகச்சரி. நாங்கள் கண்ணீரும் கம்பலையுமாக நின்றபோது எங்கள் உறவினர்கள் வருவதற்கு முன்னாலேயே நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களும் தான் வந்தீர்கள். இப்போது உறவினர்கள் சென்ற பிறகும் கூட நீங்கள் தான் இருக்கிறீர்கள்".


ரணம் பட்ட மனதுக்கு இன்சூரன்ஸ் சங்கத்தின் உதவி மருந்தாகவே இருந்திருக்கிறது .



இந்த நிகழ்ச்சியில் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது. பயனாளிகள் யாரும் மேடைக்கு அழைக்கப்படவில்லை.  பயனாளிகளின் இருக்கைக்கே சென்று அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு பயனாளி குறித்த அறிவிப்புதான் நெஞ்சை பதற வைத்தது.

துப்பாக்கிச் சூட்டில் வீர மரணம் அடைந்த  .............
துப்பாக்கிச் சூட்டில் குண்டுக் காயம் அடைந்த ................


என்று சொல்கிற போது இதயம் கனத்துப் போனது. 

வயதானவர் தொடங்கி இளைஞர்கள் வரை நாற்பது குடும்பத்தினரும் காவல்துறை துப்பாக்கியின் தோட்டாக்களை பெற்றவர்களே. அனைவருமே மிகுந்த ஏழை எளிய மக்களே, சிலரது கால்களில் இன்னும் கூட கட்டு இருக்கிறது. அவர்கள் முகங்களில் சோகம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த வலி மறையாது. 

காவல்துறையின் தோட்டாக்களோ அல்லது குண்டாந்தடியோ அளித்ததை விட மிகப் பெரிய வலி எது தெரியுமா?

ஸ்டெரிலைட் உருவாக்கிய அழிவிலிருந்து எஞ்சியுள்ள மக்களையாவது மிச்சமிருக்கும் காலத்திலாவது பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு போராடிய தங்களுக்கு ஆட்சியாளர்கள் அளித்த சமூக விரோதிகள் என்ற முத்திரை தந்த வலிதான்.

அந்த வலிக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும் . . .

4 comments:

  1. அந்த வலிக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும் . . .

    .
    செம காமெடி

    ReplyDelete
    Replies
    1. உன்னை செருப்பால் அடித்தால் என்ன என்று தோன்றுகிறது.
      அப்போது உனக்கு வலி புரியும்

      Delete
    2. இவனுகள ஈசீயா ஆப்படிக்கலாம். ஆண்டாள்ல பத்தி ஏதாவது சொன்னா இவனுக உன்னாவிரதம், போராட்டம், மறியல்னு ஆரம்பிப்பானுக. அதுல நம்மாலுக நாலுபேர விட்டு கலகம் செய்யவிட்டு போலிசவிட்டு குறிபாத்து சுட சொல்லவேண்டும்.
      ஐடியா உபயம்: மைலாப்பூர் மாபியா

      Delete
    3. ஏண்டா சூப்பர் அனானி நாயே, பாதிக்கப்ப்ட்ட மக்க்ளோட வலி உனக்கு காமெடியாடா? ராமன் சார், அவனை செருப்பால அடிக்கக் கூடாது. ஓட விட்டு பின்னாடியே சுட்டுத் தள்ளனும்.ராஸ்கல். இவன் சூப்பர் அனானியாம்.பேரைப் பாரு பொறுக்கி

      Delete