மூன்றாண்டு ஆட்சிக்காலத்தில் உருப்படியாய் எதையும் செய்ய துப்பில்லாத மோடி அரசு இப்போது மாட்டுக்கறி போன்றவற்றின் விற்பனையை நாடு முழுதும் தடை செய்துள்ளது.
ரம்ஜான் மாதம் நெருங்கும் நேரத்தில் இத்தடை என்பது இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை வெறுப்பேற்றி நாடெங்கும் கலவரங்களை தூண்டி ரத்த ருசி பார்க்க நினைக்கும் சதிச்செயலே.
நான் என்ன உணவு சாப்பிடுவது என்பதை தீர்மானிக்க எந்த கொம்பனுக்கும் உரிமை கிடையாது, அது நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தாலும் கூட.
இந்தியாவில் மாட்டுக்கறி விற்கத் தடை போடும் இந்த அரசு அவற்றை வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்ய மட்டும் தடை விதிக்காது. ஏனய்யா இந்த இரட்டை வேடம்?
மாட்டுக்கறி ஏற்றுமதி செய்கிற எல்லா முதலாளிகளும் பாஜக ஆட்கள். அவர்கள் போடுகிற எலும்புத் துண்டுகளின் ருசிக்காக ஏற்றுமதி தொடர அனுமதிப்பார்கள்.
கையாலாகததனத்தை திசை திருப்புகிற கேவலமான முயற்சி. இதனை கண்டிப்போம்.
உருளைக்கிழங்கும், காலி ஃபளவரும் எனக்கு பிடித்தமான உணவு. இருந்தாலும் அதைத்தான் சாப்பிட வேண்டும் என்று ஒரு அரசு வற்புறுத்தினால் அப்போது அவற்றை நான் நிராகரிப்பேன்.
என் உணவு, என் உரிமை.
அதை வேறு எவனும் முடிவு செய்ய முடியாது.
பின் குறிப்பு : லாலு பிரசாத் யாதவ் சொன்னது போல வயதான மாடுகளை பாஜக ஆட்களின் வீடுகளில் கட்டி வைத்து பராமரிக்கச் சொன்னால் அப்போது தெரியும் இந்த மாட்டு மண்டைகளின் யோக்கியதை.
என் சமையல் என் உரிமை
ReplyDeleteLallu prasad idea is super, we should do that, then only they will realize
ReplyDeletewhy don't we bring this mater to world court when there is no hope on Supreme bastards.
ReplyDeleteதோழரே தவறான செய்தியை பரப்புகிறீர்கள், அரசு தடை விதித்து இருப்பது இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு தான், மாட்டுக்கறி விற்பனைக்கு இல்லை. சரி இந்தியர்கள் மாடை விற்கவில்லை என்றால் மாட்டுகறி மட்டும் எப்படி வரும். அதான் அம்பாணியும் அதாணியும் ஹிந்தியாவின் மாட்டுகறி தேவைக்கு பாக்கிட்தானத்தில் இருந்து இறக்குமதி செய்து குளிரூட்டப்பட்ட கடைகளில் அழகான நடிகைகளின் படமும் உலக பணக்காரர்களின் படமும் போட்டு விற்பனைக்கு தயாரான பிறகு அல்லவா இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ReplyDeleteமேலும் வெளி நாட்டு உணவகங்களிலும், உல்லாச விடுதிகளிலும் மாட்டுகறி தாராளமாக கிடைக்கும். அவைகளை அந்த இடங்களுக்கு அதாணியும் அம்பாணியும் நேரடியாக சென்று கொடுத்துவிட்டு பணம் வாங்கி கொள்வார்கள். மேலும் இந்தியானி சுற்றுலா துறையை பாதுகாக்வே இந்த நடவடிக்கை என்று தமிழிசை அறிக்கை விடுவார்.
பாசக எவ்வளவு பெருந்தன்மையான அரசு அதை போய் விமர்சனம் செய்கிறீர்களே தோழர் நியாயமா.....தகுமா....சிந்தியுங்கள்.