நீதியரசர் கர்ணனுக்கு சிறைத்தண்டனை அளித்து தனது மாண்பையும் வல்லமையையும்
தக்க வைத்துக் கொண்டுள்ள பெருமிதத்தோடுள்ள உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு சிறிய
கேள்வி.
எந்த ஒரு பலனையும் பெறுவதற்கு ஆதார் அட்டையை நிர்ப்பந்திக்கக் கூடாது, ஆதார்
அட்டை பெறுவதும் மறுப்பதும் தனி நபர் விருப்பம் என்று உச்ச நீதிமன்றம் மிக
அழுத்தமாக பல முறை தன் தீர்ப்புக்களில் கூறி விட்டது.
“நீ என்ன சொல்றது? நான் என்ன கேக்கறது”
என்ற தெனாவெட்டோடு மத்தியரசு, ஒவ்வொரு சின்ன விஷயத்திற்குக் கூட ஆதார்
அட்டை வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள்
வாங்கும் பென்ஷனுக்குக் கூட ஆதார் எண்ணை இணைக்கச் சொல்கிறது. மதிய உணவு சாப்பிடும் குழந்தைகள் கூட ஆதார்
அட்டை வைத்திருக்க வேண்டும் என்று கட்டளை போடுகிறது.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் இந்தியாவில் வாழவே தகுதி இல்லாதவர்கள், அவர்கள்
எல்லாம் பாகிஸ்தான் போய் விட வேண்டும் என்று மட்டும்தான் இன்னும் சொல்லவில்லை.
ஆதார் அட்டை பயன்பாடு குறித்து மத்தியரசு போடும் ஒவ்வொரு உத்தரவும் உச்ச
நீதிமன்றத்துக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும்.
இதனை கண்டித்து நீதி மன்ற அவமதிப்பாகக் கருதி மோடியையோ, ஜெய்ட்லியையோ
சிறைத்தண்டனை அளிக்கும் தைரியம் உச்ச நீதி மன்றத்துக்கு உண்டா?
நண்பரே! அதற்குத்தான் ஆதார் அட்டை கட்டாயம் என்று தனிச் சட்டமே நிறைவேற்றி விட்டான்களே!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
Delete