Wednesday, May 17, 2017

ஜெமோவுக்கு ரிப்போர்ட் ஒன்னு பார்சல்





இல்லாத ரத்த அழுத்தத்தை நாமே ஏன் வரவழைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நீண்ட நாட்களாக ஆசானின் பக்கம் செல்லவே இல்லை.

ஆனாலும் எழவு, குமுதம் லைப்பில் அவர் கொடுத்த நேர்காணல் கண்ணில் பட்டுத் தொலைந்து விட்டது.

ஆசான் பொது அறிவில் தான் ரொம்பவும் வீக் என்பதை இப்படி வெளிக்காட்டிக் கொண்டிருக்க வேண்டாம். மோடியின் சாம்ராஜ்யத்தில் இந்தியா அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்ற ஹிட்டன் அஜெண்டாவாகக் கூட  இருக்கலாம்.

“முன்னூறு கொலைகள் மூன்று கொலைகளாக குறைந்து விட்டது. பெண்கள் மீதான வன்முறைகள் எல்லாம் வெகுவாக குறைந்து விட்டது. போலீஸ் ரிப்போர்ட்டுகளே இதைத்தான் சொல்கிறது”

இதுதான் ஆசான் கூற்று. குற்றங்கள் குறைந்து விட்டது என்று ஆசானுக்கு எந்த சிரிப்பு போலீஸ் ரிப்போர்ட் கொடுத்தார் என்று தெரியவில்லை.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் தேசிய குற்ற ஆவண ஆணையம் என்று ஒரு பிரிவு உள்ளது. அதன் தலைவராக ஜெ வால் பந்தாடப்பட்ட அர்ச்சனா ராமசுந்தரம், ஐ.பி.எஸ் கூட இருந்திருக்கிறர். இந்த குற்ற ஆவண ஆணையத்தின் முக்கியமான வேலையே ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுதும் பதிவு செய்யப்பட்ட குற்றங்களை தொகுத்து அறிக்கை கொடுப்பதுதான்.

2015 ம் ஆண்டிற்கான அறிக்கைதான் கடைசியாக வந்தது. இந்த அறிக்கையை ஆசானுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன் அதன் படி இந்திய குற்றவியல் சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டும்.

2014 ல் 28,51,563
2015 ல் 29,49,400

மற்ற சிறப்புச் சட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்

2014 ல் 43,77,630
2015 ல் 43,76,699
                    
கொலைகள்

2014 ல்   33,981
2015 ல்   32,127

1953 ல் நிகழ்ந்த கொலைகள் என்னவோ 9802 தான்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

2014 ல்  3,37,922
2015 ல்  3,27,394         

அதிலே பாலியல் வன்புணர்ச்சி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 1971 ல் 2,487 என்றால் 2015 ல் 34,651.

இவையெல்லாம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் புள்ளி விபரம் மட்டுமே. சட்டத்தின் பார்வைக்கு வராமலே மண்ணில் புதைக்கப்பட்ட வழக்குகள் எவ்வளவோ.

முழுமையான தகவல்கள் கிடைக்கிற விஷயத்திலேயே இவர் இப்படி அள்ளி விடுகிறார் என்றால் மற்ற விஷயங்களில் எவ்வளவு கதை விடுவார்! ஆனால் அறம் பற்றி வாய் கிழிய பேசுவதில் மட்டும் குறைச்சல் கிடையாது.

அந்த கேள்விக்கான பதிலை முடிக்கிறார் பாருங்கள். அங்கேதான் ஜெயமோகனின் வழக்கமான வன்மமும் வக்கிரமும் இணைந்து நிற்கும்.

“கிறிஸ்துமஸ் விழா என்றால் கூட அது கொலையில்தான் முடியும்”

நரி செத்தாலும் இரை மீதே கண் இருக்கும் என்பது போல ஜெமோ என்ன எழுதினாலும் பேசினாலும் அது மற்ற மதங்களையும் பெண்களையும் மட்டம் தட்டாமல் முடியாது.

No comments:

Post a Comment