ஃப்ரிட்ஜூக்கான ஒரு ஸ்பேர் பார்ட் வாங்க வேறு வழியில்லாமல் கடும்
வெய்யிலில் நேற்று வெளியே போக வேண்டியிருந்தது. அப்போது கண்ணில் பட்ட மூன்று
காட்சிகளைப் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
ஒரு தெருவில் ஒரு முதியவரின் சடலம் குளிர்ப்பெட்டியில் வைக்கப்
பட்டிருந்தது. அந்த தெரு வழியாகத்தான் தினம் சென்று வருகிறேன். வீட்டு
வாசலில் ஒரு கணவன், மனைவி, ஒரு குழந்தை
ஆகியோரைப் பார்த்துள்ளேனே தவிர அந்த
முதியவர் இத்தனை வருடங்களில் கண்ணில் பட்டதே கிடையாது.
அவர் இறப்பின் மூலம்தான்
இத்தனை நாள் அங்கே வாழ்ந்திருந்தார் என்று தெரிந்தது.
நான் சென்ற கடை உரிமையாளர் ஒரு
இஸ்லாமியர். அவர் தம்பி என்று பாசமாக அழைக்க உள்ளே இருந்து ஒரு ஆட்டோ ஓட்டுனர்
வந்தார். நேத்து அண்ணியை கூட்டுட்டு போனதுக்கு பணம் கேட்டு வாங்கியிருக்கக் கூடாதா
என்று பணத்தை அளிக்கிறார். உங்க கிட்ட இருக்கிற பணம் எங்கே போய்டும் அண்ணே என்று சொல்லிக் கொண்டே வாங்கிக்
கொண்டார். அந்த ஆட்டோ ஓட்டுனரின் பேட்ஜில் முருகன் என்று பெயர் இருந்தது. அவர் நெற்றியில்
விபூதியும் குங்குமமும் பளிச்சென்று தெரிந்தது.
இதுதான் இயல்பான இந்தியா. இந்த ஒற்றுமையை எத்தனை சதி செய்தாலும்
பரிவாரக் கும்பலால் சீரழிக்க முடியாது.
வீடு திரும்புகையில் புதிய பேருந்து நிலையம் அருகே சிவப்பு சிக்னல்
எரிகிறது. ஒரு பைக் மூன்று பேரோடு வேகமாக சிக்னலை மதிக்காமல் கோட்டைக் கடந்து
விரைகிறது. எதிரே வேகமாக ஒரு பேருந்து.
நிச்சயமாக பைக்கின் மீது மோதப்போகிறது
என்று நினைக்கையில் ப்ரேக் போட்டு விட்டார். பைக் ஆசாமிகளோ கீழே விழுவது போல
சாய்ந்து எழுந்து போய்க் கொண்டே இருந்து விட்டார்கள், இன்னும் வேகத்தோடு.
அவ்வளவு அவசரமா எங்கடா போறீங்க? இவங்களுக்கு ஏதாவது ஆனால்
பரவாயில்லை. இவர்கள் திமிர்த்தனமாக வண்டி ஓட்ட, சம்பந்தமே இல்லாதவர்கள்
பாதிக்கப்பட வேண்டுமா?
//இறப்பின் மூலம்தான் இத்தனை நாள் அங்கே வாழ்ந்திருந்தார் என்று தெரிந்தது//
ReplyDeleteஉண்மை. பெரும்பாலும் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது
இந்து முஸ்லீம் சண்டை படத்திலயும் ஊடகத்திலும்தான் உண்டே தவிர மக்கள் மனதில் இல்ல
ReplyDeleteஇந்து முஸ்லீம் சண்டை சினிமாவில் மட்டுமே உண்டு. அரசியல்வாதிகளும், ஊடகமும்தான் எங்கோ ஒரு சில இடத்தில் நடப்பதை பெருசு படுத்துறாங்க. மக்கள் மனதில் பேதமில்ல
ReplyDeleteஅப்படிப்பட்ட சூழலை உருவாக்கத்தான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் அமைப்புக்கள் தொடர்ந்து முயற்சிக்கின்றன
DeleteCinema plays main role in hindu muslim relationship, it affects ,,and we accept without any agitation slowly,
ReplyDeleteக... (மன்னிக்க) திருடர் உலகம்.
ReplyDeleteஇத்தனை நிமிடத்தில் வண்டி ஓட்டினேன் என்று போலி பெருமிதம் கொள்வதற்காக வண்டி ஓட்டி சம்பந்தமே இல்லாதவர்கள் பாதிக்கப்படும் கொடுமைகள் தானே அங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது.
ReplyDelete