Friday, May 12, 2017

நீங்களும் பிரதமராகலாம் . . .





பல பழைய கோப்புக்களை நீக்கிக் கொண்டிருந்த போது கண்ணில் பட்டது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது எழுதியது. இன்றைய சூழலில் புதிதாய் ஒன்றை கடைசியில் இணைத்துள்ளேன். பிற்சேர்க்கை என்பதால் வேறு மையில் பெரிய எழுத்தில் கொடுத்துள்ளேன். அதிலே சொல்லப்பட்ட திறமை இருந்தால் நீங்களும் பிரதமராக முடியும்.


பிரதமர் பதவி ...  இவையும் சாத்தியம், இதுவும் கூட சாத்தியம்.

ஆங்கிலத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல் இன்னும் கொஞ்சம் கூடுதல் விபரங்களோடு இங்கே தமிழில் உங்களுக்காக

செல்வந்தர் ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை ஜவஹர்லால் நேரு நிரூபித்தார்.

ஏழை ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை லால் பகதூர் சாஸ்திரி  நிரூபித்தார்.

பெண்மணி ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை இந்திரா காந்தி நிரூபித்தார்.

முதியவர் ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை மொரார்ஜி தேசாய் நிரூபித்தார்.

விவசாயி ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை சரண்சிங் நிரூபித்தார்.

இளைஞர் ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை ராஜீவ் காந்தி நிரூபித்தார்.

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை வி.பி.சிங் நிரூபித்தார்.

கலகக்காரர் ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை சந்திரசேகர் நிரூபித்தார்.

அடுத்தவர் மரணத்தில் அதிர்ஷ்டம் அடித்து ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை நரசிம்மராவ் நிரூபித்தார்.

இருபத்தி ஐந்து எம்.பிக்களை வைத்திருந்தால், யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை தேவே கௌடா நிரூபித்தார்.

கண்ணியமான ஒருவர் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை ஐ.கே.குஜ்ரால் நிரூபித்தார்.

இடிப்பு வேலைகள் மூலமும் பிரதமர் ஆவது சாத்தியம் என்பதை வாஜ்பாய் நிரூபித்தார்.

தேடி வந்த பிரதமர் பதவியைக் கூட துறப்பது சாத்தியம் என்று தோழர் ஜோதி பாசு நிரூபித்தார்.

ஆனால், ஆனால், ஆனால், ஆனால், ஆனால், ஆனால், ஆனால், ஆனால்,

ஒரு நாட்டிற்கு பிரதமரே அவசியமில்லை என்று உணர வைத்த பெருமை மன்மோகன்சிங்கால் மட்டுமே சாத்தியமானது.

நன்றாக பொய் பேசத் தெரிந்தால் மோசமான மனிதர் கூட பிரதமர் ஆக முடியும் என்பதை நிரூபித்தது மோடி மட்டுமே. 

பின் குறிப்பு : இதைப் படித்து விட்டு மோசடிப் பேர்வழியான அனாமதேய மொகபா வும் பிரதமராக முயற்சி செய்யும் என்பதுதான் அச்சத்தை தருகிறது. 
a

4 comments:

  1. Ha ha. Many from nehru family ditectly or indirectly influenced by nehru family, so only nehru family ruled india, the alternative bjp prime ministers making us to support again nehru family and the common maN thinks somewhat Nehru family is Better!

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீ யாருங்கற அடையாளத்தோட வா, உனக்கு தைரியம் இருந்தா. அப்போ உன் கமெண்டை பப்ளிஷ் பண்றேன். உன் யோக்கியதை என்னவென்று அப்போதுதானே மற்றவர்களுக்கும் தெரியும். நான் பிரசுரிக்க மாட்டேன் என்ற தைரியத்தில் ஒரு முறை எழுதி அசிங்கப்பட்டதை மறந்திருப்பாயா என்ன?

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete