Sunday, May 14, 2017

நீ வேண்டுமானால் . . . . . இருக்கலாம்




பொதுமக்கள் குடி நீருக்காக
போராடும் போதும்;

அரசு ஊழியர்கள்
அவர்களின் நியாயத்திற்காகப் போராடும் போதும்;

டாக்டர்கள் அவர்களின்
உரிமைக்காக போராடும் போதும்;

மாணவர்கள்
கல்விக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடும்போதும்;

இளைஞர்கள் வேலை கேட்டுப் போராடும்போதும்;

மாற்றுத்திறனாளிகள்
உரிமை கேட்டுப் போராடும் போதும்;

இப்படி
அரசாங்கத்தின் அலட்சியத்தால்;
ஆட்சியாளர்களின்
தான் தோன்றித்தனத்தால்;
கோடி கோடியாக அரசின் பணத்தை
திருடும் சூறையாடும்
கொள்கையால்
பாதிப்பிற்குள்ளான பலரும்
அவர்கள் அவர்கள் நேரத்திற்கு
தகுந்தவாறு
சாலையில் இறங்கிப் போராடும்போது
அரசு சொல்லும்..
ஆட்சியாளர்கள் வாந்தி எடுக்கும்
ஒரே வார்த்தை
போராட்டம் பொது மக்களுக்கு எதிரானது..

போங்கடா வெண்ணைகளா..
ஊரை அடித்து உலையில் போட்டு
நீங்கள் சம்பாதித்த
கோடி கோடியான பணம் எல்லாம்
யாருடையது..
யாருக்கு சேவை செய்ய
கோடி கோடியாக கமிஷன் வாங்குகிறீர்கள்?
காண்டக்டர்களிடம்.

கடந்த 1 வருடமாக ஒழுங்க
ஆட்சி செய்ய துப்பில்லை
இன்று
போக்குவரத்து தொழிலாளர்கள்
அவர்களின் நியாயங்களை
உரிமைகளை எடுத்து சொல்லி பேசிய போதும் 

பேச்சு வார்த்தைய சுமூகமாக
பேசித் தீர்க்க வக்கில்லை..
போராட்டம் நடத்தும் போது
பொது மக்ளுக்கு எதிரான போராட்டம் என 

பேட்டியாம்.. மண்ணாங்கட்டி.

போக்குவரத்து  தொழிலாளியும்
பொது மக்கள்தாண்டா..
நீ வேணும் என்றால்
பொது மக்களில் ஒருவனாக இல்லாத
ஜந்துவாக இருக்கலாம்..

நாங்கள் பொது மக்கள்..
போக்குவரத்து தொழிலாளிக்கு ஆதரவானவர்கள்..

#தொழிலாளர்போராட்டம்வெல்லட்டும்


நன்றி - தோழர் கருப்பு அன்பரசன்

3 comments:

  1. வெல்லட்டும்

    ReplyDelete
  2. எளிதாக முடிக்கப்படவேண்டியதை நீட்டி நீட்டி....சோதனைக்குள்ளாக்குகின்றார்கள்...
    பாதிப்புக்குள்ளாவது தொழிலாளர்களே.

    ReplyDelete
  3. எடப்பாடி அரசை மக்கள் தேர்ந்து எடுக்கவில்லை. திருவிளையாடல் படத்தில்
    வருவது போல் யாரோ எழுதி கொடுத்து வந்தது . அதுவே அதன் பலவீனம்.
    அதன் பொது செயலாளர் 4 வருடம் வெளியே வரமுடியாது உதவி பொது
    செயலாளர் திஹார் சிறையில். ஆட்சி யார் நடத்துகிறார்கள் என்றே
    தெரியவில்லை. கூவத்தூரில் கொள்ளைகளை பங்கு பிரித்த மந்திரிகளுக்கு
    ஊழியர்களின் வேலை நிறுத்தம் பற்றி கவலை இல்லை. கொள்ளை அடித்த
    பணத்தை ரைடிலி ருந்து காப்பாற்றுவதே அவர்கள் கவலை.

    ReplyDelete