பாபரும் அக்பரும் இந்தியாவை படையெடுக்க வந்தவர்கள் என்பதை உணர்ந்து
கொண்டால் இந்தியாவின் பிரச்சினைகள் எல்லாம் அப்படியே ஜீபூம்பா என்பது போல மறைந்து
விடும் என்று திருவாய் மலர்ந்து அருள் வாக்கு அளித்துள்ளார் மோடியின் போட்டியாளர்
யோகிசீ சாமியார்.
பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்
கருத்து கிடையாது. பாபர் வருவதற்கு சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு இந்தியாவிற்குள்
நுழைந்தவர்கள் ஆரியர்கள் (அதாங்க, இந்த மோடி, யோகி வகையறாக்களின் முன்னோர்கள்)
என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
எனக்கு என்ன புரியவில்லை என்றால் பாபர் படையெடுத்து வந்தார் என்பதை
உணர்ந்து கொண்டால் இந்தியாவின் பிரச்சினைகள் உடனடியாக மறைந்து விடும் என்று
சொல்கிறாரே, அது எப்படி என்று விளக்கினால் நல்லது.
இந்தியாவின் பிரச்சினைகள் என்ன?
வறுமை
வேலையின்மை
அதனால் அடிப்படை வசதிகளான உணவு, வீடு, கல்வி, சுகாதாரம் ஆகியவை பெரும்பாலான
மக்களுக்கு கிடைக்காமல் இருப்பது.
விவசாயம்,
தொழில்,
சேவைத்துறை
என மூன்று துறைகளுமே சிக்கலில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. உலகமயமாக்கலின்
விளைவாக ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான
இடைவெளி அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
இவை வாழ்வாதார, பொருளாதாரப் பிரச்சினைகள் என்றால்
தீண்டாமை
காவிகள் உருவாக்கியுள்ள கலாச்சார பயங்கரவாதம்
சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகள்
என்று சமூகப் பிரச்சினைகள் நிலவுகிறது.
இவை அனைத்தும்
“பாபரும் அக்பரும் படையெடுத்து வந்தவர்கள் என்று ஒப்புக்கொண்டால்”
மறைந்து விடும் என்று சொல்கிறார் யோகிசீ.
“வாலி” திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். உடல் முழுக்க தீராத வியாதிகள் கொண்ட
ஒரு நோயாளி, ஒரே ஒரு மாத்திரையில் அத்தனை நோயும் குணமாக வேண்டும் என்று சொல்வார்.
விஷத்தைக் கொடுத்து அந்த நோயாளிக்கு அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை
கொடுப்பார் விவேக்.
இந்தியாவையே தீ வைத்து கொளுத்தி விட்டு மக்கள் அனைவரையும் சாக வைத்து
பிரச்சினைகளை தீர்க்க யோசித்துள்ளாரோ?
ஆரிய, கிருத்துவ, இந்துவ பிரச்சனை இப்போது முக்கியமா? யாரால் வந்தது தெரியுமா? மோடியால் வந்ததா? சரித்திரம் தெரிய நான் பதிவிடுகிறேன் தோழரே..அன்புடன்,ஸ்ரீநாத்.
ReplyDeleteநன்றி. பாபரும் அக்பரும் இந்தியாவை படையெடுக்க வந்தவர்கள் என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டால் இந்தியாவின் பிரச்சினைகள் எல்லாம் நொடிப் பொழுதில் மறைந்து விடும் என்று யோகி ஆதித்யநாத் அபத்தமாக உளறியதே இப்பதிவின் அவசியம்
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteAccording to Modi and his shishyas all the indian problems are due to muslims.all good things happens due to bjp and braminical hindu folks.
ReplyDelete