யார் சிறந்த அடிமை என்று நிரூபிப்பதற்கான போட்டி ஓ.பி.எஸ் ஸுக்கும்
எடப்பாடிக்கும் நடந்து கொண்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ஓ.பி,எஸ் காவல் துறையை ஏவி
போராட்டக்காரர்களை ஒடுக்கினார் என்றால்
மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளார்
எடப்பாடி.
போராட்டங்களை ஒடுக்குவதன் மூலம் மொடியிடம் தங்களின் நிர்வாகத் திறனை
காண்பித்துக் கொள்கிறார்களாம்.
திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள்,
கட்டைப்பஞ்சாயத்து செய்பவர்கள், பாலியல் கொடூரர்கள், ரௌடிகள், செயின்
பறிப்பவர்கள், கொலைகாரர்கள், கூலிப்படைக்காரர்கள் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது
செய்தால் அது சரி.
இலங்கையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் அதற்கு குண்டர் சட்டமா?
அரசின் கொள்கைகள் சரியில்லை என்று போராடினால் அதற்கும் குண்டர் சட்டமா?
இன்று திருமுருகன் காந்தி மீது பாய்ந்துள்ள குண்டர் சட்டம், நாளை போராட்ட
களத்தில் நிற்பவர்கள் அனைவர் மீதும் பாயும். டாஸ்மாக்கிற்கு எதிராகவோ அல்லது
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாகவோ அல்லது மாட்டிறைச்சி தடைக்கு எதிராகவோ அல்லது
மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவோ யார் போராடினாலும் அவர்கள் மீது எந்த கறுப்புச் சட்டத்தையும்
பயன்படுத்த இந்த அரசு தயங்காது என்பதன் அறிகுறி இது.
ஊழல் பேர்வழிகள் உல்லாசமாய் உலா வருகையில் போராட்டக்குரல் எழுப்புபவர்கள்
மீது குண்டர் சட்டம் என்றால்
தமிழகம் முன்னெப்போதையும் விட மோசமான திசைவழியில் சென்று கொண்டிருக்கிறது
என்று அர்த்தம்.
மோடியின் பாசிஸ வியாதி எடப்பாடிக்கும் தொற்றிக் கொண்டிருக்கிறது.
மாத்திரைக்கெல்லாம் சரியாகாது. அறுத்தெரிய வேண்டிய புற்று நோய்.
No comments:
Post a Comment