பிரபல ஹிந்திப்பட இயக்குனர் மன்மோகன் தேசாயை ஒரு முறை பத்திரிக்கையாளர்கள்
பேட்டி கண்ட போது “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? “ என்று கேட்டார்கள்.
“ஒரு காட்சிக்குப் பின் அடுத்த காட்சி, அதற்கடுத்து இன்னொரு காட்சி என்று
காட்சிகளை வேகம் வேகமாக அடுக்கிக் கொண்டே வருவேன். அந்த வேகத்தில் முந்தைய காட்சி
பற்றி ரசிகன் யோசிக்கவே அவகாசம் இருக்காது. ரசிகனை சிந்திக்க விடாமல் செய்வதே என்
வெற்றியின் அடிப்படை” என்று
பதிலளித்தாராம் மன்மோகன் தேசாய்.
அது போலத்தான்
ஸ்டாண்ட் அப் இந்தியா,
க்ளீன் இந்தியா,
மேக் இன் இந்தியா,
ஸ்டார்ட்டப் இந்தியா,
டி மானிட்டைசேஷன்,
டிஜிட்டல் இந்தியா
என்று அடுத்தடுத்து முழக்கங்களை மோடி அடுக்கிக் கொண்டே போகிறார். மன்மோகன்
தேசாய் போல மக்கள் சிந்திப்பதற்கு அவகாசம் கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறார். முந்தைய
திட்டத்தின் அமலாக்கம் நடந்ததா, அதன் விளைவு என்ன என்பதைப் பற்றியெல்லாம் அவருக்கு
கவலை இல்லை. மக்கள் சிந்திக்க வாய்ப்பு தரக்கூடாது. அவ்வளவுதான்.
01.05.2017 அன்று
வேலூரில் நடைபெற்ற
மேதினப்
பொதுக்கூட்டத்தில் எங்கள்
தென் மண்டலத்
துணைத்தலைவர் தோழர்
கே.சுவாமிநாதன்
பேசியதிலிருந்து.
உண்மையான விடயம் மறுப்பதற்கில்லை நண்பரே...
ReplyDelete