பொதுவாக பிறந்தநாள் என்பது எல்லா நாட்களைப் போலத்தான் கடந்து போகும்.
சிறப்பாக கொண்டாடும் பழக்கம் என்பது எப்போதும் கிடையாது. கடந்த சில வருடங்களாக
முகநூலில் இணைந்த பின்பே வாழ்த்துக்கள் வர ஆரம்பித்தது. ரகசியமாக ஒரு வாழ்த்து
அட்டை தயாரித்து மகன் இன்ப அதிர்ச்சி கொடுக்கத் தொடங்கியவுடன் ஒரு எதிர்பார்ப்பு
உருவானது என்பதும் யதார்த்தம். அதே போல ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி திரு
பா.இசக்கிராஜன் அவர்களின் வித்தியாசமான வாழ்த்தையும் சொல்லலாம்.
இந்த வருடம் ஒரிஜினல் பிறந்த நாளான 19 மே, காலையிலிருந்தே வாழ்த்துக்கள் குவியத் தொடங்கியது. முக நூலில்,
வாட்ஸப்பில், குறுஞ்செய்தியில், தொலைபேசி அழைப்பில், நேரில் ஏராளமானவர்கள்
வாழ்த்து சொன்னார்கள். அன்பையும் பாசத்தையும் தோழமை உணர்வையும் பல்வேறு
வார்த்தைகளில், வடிவங்களில் வெளிப்படுத்திய தோழர்கள் ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த
நன்றியை உரித்தாக்குகிறேன்.
வழக்கமான நாளாக கடந்து போயிருக்க வேண்டிய நாள்தான். ஆனால் அன்பில் மூழ்கி
தத்தளிக்கும் நாளாக மாற்றியவர்களுக்கு என்ன கைமாறு செய்ய முடியும்? அதே அன்பை எந்நாளும்
எதிரொலிப்பதை விட . . .
இன்னொரு நிறைவும் அன்று ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
சார்பில் “பேரூராட்சிப் பகுதிகளுக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை
விரிவு படுத்த வலியுறுத்தி மனு அளிக்கும் இயக்கம்” அன்றைய தினம் வேலூர்
மாவட்டத்தில் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற
இயக்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. நூற்றுக்கணக்கில் பெண்கள் கலந்து
கொண்ட அந்த இயக்கத்தில் அவர்கள் மத்தியில் பேசியது மன நிறைவை அளித்தது.
அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி.
பின் குறிப்பு : ஐந்து நாள் கால தாமதம் தவிர்க்க இயலாமல் போய்
விட்டது.
வாழ்த்துக்கள் தான்
ReplyDeleteவாழவைக்கின்றன.
ஆமாம் சார். உண்மை
Deleteதாமதமானாலும் பிறந்த தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteBelated wishes
ReplyDeleteMANY HAPPY RETURNS OF THE DAY COMRADE
ReplyDeleteBADRINATH