முகமது பின் துக்ளக்கின் வாரிசாக ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்துள்ளார் மோடி.
என்.டி டிவி தடை விஷயத்தில் பல்டி அடித்தது போல இது விஷயத்திலும் பல்டி அடித்தால் வியப்பில்லை.
கருப்புப் பணத்திற்கு எதிரான போர் என்று சொன்னாலும் அடிப்படையில் இது சாதாரண மக்களுக்கு எதிரான துல்லியமான தாக்குதல்.
ஏற்கனவே குவிந்துள்ள வேலைகளால் சிரமப்படும் வங்கிகளுக்கு தேவையற்ற பணிச்சுமை.
கைவசம் உள்ள பணத்தை மாற்றுகிறவரை அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத அவலம்தான் மக்களுக்கு.
கருப்புப் பணம் உள்ளவர்கள் எல்லாம் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களாகத்தான் வைத்திருப்பார்கள், அவையெல்லாம் இப்போது வெளியே வந்து விடும் என்று நினைத்தால் மோடியைக் காட்டிலும் முட்டாள் யாரும் இருக்க முடியாது.
கண்டெய்னர்களில் பணத்தை பதுக்கத் தெரிந்த அரசியல் கிரிமினல்களால் அதை சிக்கல் இல்லாமல் மாற்றவும் முடியும்.
வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை, நிலமாக, நகையாக, பங்குகளாக பதுக்கி வைத்துள்ளவற்றை எப்படி வெளியே கொண்டு வரப் போகிறார்?
இப்போது இந்த முடிவின் பின்னணியில் வேறு ஏதோ அயோக்கியத்தனத்தை சத்தமில்லாமல் செய்யப் போகிறதா என்ற சந்தேகம்தான் வருகிறது.
பின் குறிப்பு : தன் கைவசமுள்ள நோட்டுக்களை மாற்ற ஆசான் ஏதாவது வங்கிக்குப் போனால் அவர் வேலையை முதலில் முடித்து அனுப்பி விடுங்கள். இல்லையென்றால் அவர் மீண்டும் "அறம்" கற்றுக் கொடுக்கத் தொடங்கி விடுவார்.
ஏற்கனவே குவிந்துள்ள வேலைகளால் சிரமப்படும் வங்கிகளுக்கு தேவையற்ற பணிச்சுமை. // அவர்களுக்கு என்ன வேலை சுமை ? பாதி வேலைகள் ஆன்லைன் வழியாகவே நடக்கிறது இன்னும் கொஞ்ச நாளில் முழு வேலையும் இணையம் வழியாகவே நடக்கும் இப்படி இருக்க இனிமேல் சீட்டை தேய்க்க முடியாது என்பதால் நீங்கள் அறச்சீற்றம் கொள்கிறீர்கள் அதற்காக ஆசானை நான் ஆதரிக்கிறேன் என்று பொருளல்ல
ReplyDeleteவங்கியில் ஆன்லைன் பற்றியோ அல்லது வங்கிப் பணிச்சுமை பற்றியோ உங்களைப் போன்ற அரை வேக்காடுகளுக்கு எதுவும் தெரியாது என்பதில் எனக்கு வியப்பேதும் இல்லை.
ReplyDeleteso,
ReplyDeleteRaman sir
is familiar for
Commenting personally!
he proved again saying an UNKNOWN PERSON
"உங்களைப் போன்ற அரை வேக்காடுகளுக்கு"
vellore officla ivar kitta public
transaction seiya vandha....
NALLA MARIYADHAI kidaikkum.
Aandava...
Ippo yenakkum yethavadhu kidaikkum
illena comment delete pannuvaar...
sir Communist....
appadiye சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு ""சாமானிய"" ஊழியன்!!!
sonna nambunga Bro!
அய்யா கோழை அனானி,
Deleteஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காண்பிக்கச் சொன்ன யேசுநாதரின் வாரிசு அல்ல.
"அடித்தால் திருப்பி அடி" என் கீழத்தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு போராட்ட உணர்வை உருவாக்கிய தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவன்.
"என் ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கிறான்" என்ற மார்க்சிய சிந்தனை மரபைச் சேர்ந்தவன்.
பின்னூட்டம் எந்த மொழியில் வருகிறதோ, அதே மொழியில்தான் என் பதிலும் இருக்கும். அநாகரீகமான வார்த்தைகளில் பேசினால் அது போலத்தான் பதிலும் இருக்கும்.
நாகரீகம் என்பது உங்களிடம் இல்லாத போது பதிலை மட்டும் நாகரீகமாக ஏனய்ய எதிர்பார்க்கிறீர்கள்.
ஆபாச வார்த்தைகள் உள்ள பின்னூட்டத்தை மட்டும்தான் நீக்குவேன். உங்களது பின்னூட்டம் ஏதாவது நீக்கப்பட்டிருந்தால் அதற்கு நீங்களேதான் பொறுப்பாக இருப்பீர்கள்.
இன்னொன்று அனாமதேயங்களுக்கெல்லாம் இவ்வளவு ரோஷம் இருக்கக் கூடாது
ReplyDelete"உங்களைப் போன்ற அரை வேக்காடுகளுக்கு"
I am not sure whom you are referring to.. I worked in that area.. even particularly security. i know how online works. If you have knowledge then can you answer following questions?
1. What is the difference between website, portal and a web app?
2. How does security mechanism work in web?
3. What is encryption/decryption?
4. how the multiple concurrent transactions managed in web?
Don't ask your son.. at least do your own research at google and let me know the answers.
I said work load is less becausefor following transactions earlier people used to visit branches often now totally online or out of branches.
1. cash withdrawal.
2. cash deposit (happens in ATM, i too used this option several times)
3. Money transfer (complete NEFT,RTGS and IMPS)
4. Check deposit
5. check requests etc.
6. Statements
etc.,
dont be frog in your own well and dont gross generalize people..
என்னை கிண்ற்றுத் தவளை என்று வர்ணிக்கும் தாங்கள் கொஞ்சம் அந்த மஞ்சள் கண்ணாடியை அகற்றி விட்டு வாருங்கள். வங்கியில் செக்யூரிட்டியாக இருந்ததாக சொல்லும் தாங்கள் வங்கிக்கு உள்ளேயும் செல்லுங்கள். அங்கே இருக்கும் ஊழியர்களிடம் அவர்களின் பணிச்சுமையைப் பற்றிக் கேளுங்கள். நான் இப்போதைய புதிய சுமையை கூறவில்லை. அதற்கு முன்னதாக உள்ள பணி பற்றி. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளவும்.
DeleteI request you to understand again.. i never worked as security in any of the banks. I worked as a developer on web application development in an IT company. I have good experience in "web application security" not security guard...
ReplyDeleteGood that you had lot of experience in banking outside the premises of a bank. I again repeat. Go to any PSU bank and talk with the employees there. Then you will find to know whether their load had reduced with the advent of new technologies.
ReplyDelete