Wednesday, November 16, 2016

அக்கவுண்ட் இல்லாதவனுங்க சாவுங்கடா?




வங்கிகளில் ஒருவர் ஒரு முறைதான் செல்லாத பணத்தை மாற்ற வேண்டுமாம். அதுவும் நாலாயிரத்தி ஐநூறு ரூபாய் மட்டும்தானாம்.

பலர் பல முறை வருகிறார்களாம். அதை தடுக்கத்தான் அடையாள மை வைக்கப் போகிறார்களாம்.

இதை சொன்னது இந்த செல்லாத நோட்டு விவகாரத்தின் கதாநாயகன் என்று ஊடகங்களால் புகழப்படும் சக்திகாந்த தாஸ்.

ஐய்யா சாமி தாஸூ, உங்க நிதித்துறைதான் சொல்லுது, இந்திய மக்களில் முப்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்களிடம் வங்கிக் கணக்கு கிடையாதாம். 

அப்படின்னா அவங்க 4500 ரூபாய்க்கு மேல வைச்சிருந்தா, உங்க அறிக்கைப் படி அது நிஜமாகவே செல்லாத நோட்டு. அது பல வருடங்கள் சேமித்த தொகையாக இருந்தாலும் கூட. உழைத்து சேர்த்த பணமாக இருந்தாலும் கூட.

வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் வெறும் 4500 ரூபாய் மட்டுமே வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அது கருப்புப் பணம். அப்படித்தானே ஆபிசர்! வங்கியில் கணக்கு வைக்க துப்பில்லாதவன் எதற்கு உயிரோடு இருக்க வேண்டும் என்பதுதானே உங்கள் அறிக்கையின் அர்த்தம்?

வெறும் பதினாறு பேர்தானே செத்தாங்க என்று ஆதங்கப்பட்டார் காமெடி பார்ட்டி எஸ்.வி.சேகர். பேங்கில அக்கவுண்ட் இல்லாத அத்தனை பேரையும் சாகடிச்சு அவரை சந்தோஷப்படுத்தப் போறாங்க.

உங்க புத்தியில கொள்ளி வைச்சாலும் உருப்பட மாட்டீங்க பாவிகளா?
 

2 comments:

  1. அதான் எல்லா டோல்கேட்டயும் ப்ரீ செய்துட்டாரே!? இன்னமுமா? ஏழைகள் கஷ்டப்படுறாங்க.! நம்பவே முடியல.

    ReplyDelete
  2. LOT OF BRIBE MONEY IS THERE IN THE HOUSES OF OFFICIALS OF RTO , TNEB REGISTRATION DEPT
    POLICE IAS CUSTOMS AND CENTRAL EXCISES PORT TRUST . RAID SHOULD BE CONDUCTED AND THE MONEY SHOULD BE CONFISCATED. MLAS MPS AND COUNCILLORS SHOULD ALSO BE BOOKED FOR POSSESSION OF BLACK MONEY. THEN ONLY MODI"S ACTION SO CALLED CLEANSING THE BLACK MONEY IS JUSTIFIED.. OTHERWISE IT IS SHEER WASTE OF TIME. GUILTY SHOULD BE PUNISHED BUT INNOCENT SHOULD NOT BE TROUBLED.
    COMMON MAN SHOULD NOT SUFFER IN RUNNING HIS DAY TO LIFE.

    ReplyDelete