நாடாளுமன்றத்திற்கு வராமல் மோடி ஒளிந்து கொள்கிறார் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க்ட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் நிகழ்த்திய உரை முழுவதுமாக அளிக்கப்பட்டுள்ளது. அற்புதமான உரையை பொறுமையாக படியுங்கள்.
மோடியின் மூடத்தனத்தை நார் நாராக கிழித்தெறிந்துள்ளார். மூளையை அடகு வைத்தவர்களால் கூட தோழர் யெச்சூரியின் கருத்துக்களை மறுக்க முடியாது. அப்படி இருக்கையில் மோடியால்?
வழக்கமாகவே நாடாளுமன்றத்திற்குச் செல்ல மோடிக்கு பிடிக்காது. இப்படி கேள்வி எல்லாம் கேட்டால் அழுகை வேறு வந்து விடவும். அதனால் 56 இஞ்ச் மார்பரை நாடாளுமன்றத்தில் மட்டும் எதிர்பார்க்க வேண்டாம்.
முழுமையான உரையை தமிழாக்கம் செய்த தோழர் ச.வீரமணி அவர்களுக்கும் தீக்கதிர் நாளிதழுக்கும் மனமார்ந்த நன்றி
இங்கிருந்து வங்கி எவ்வளவு தூரம்?
கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாக கூறி பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10
நாட்களாக ஒட்டுமொத்த இந்திய மக்களையும் துயரத்தின் பிடியில் சிக்க
வைத்திருப்பதை எதிர்த்து மாநிலங்களவையில் நவம்பர் 16 புதனன்று
எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து விரிவான
விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆவேசத்துடனும் புள்ளி
விபரங்களுடனும் மோடி அரசின் துக்ளக் ராஜ்ஜியத்தை அம்பலப்படுத்தினார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்.
500
ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்றுஅறிவித்ததன் மூலம் நாட்டின்
அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் படும் துன்ப துயரங்கள் குறித்து நாம் இங்கே
பேசிக்கொண்டிருக்கிறோம்.நம் பிரதமர் மோடியும் ரூபாய்நோட்டுகள்
இல்லாவிட்டால் என்ன, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்டபிளாஸ்டிக்
நோட்டுகளை பயன்படுத் துங்கள்’ என்கிறார். நாட்டிலுள்ள 113 கோடி மக்களில்
எத்தனை பேரிடம் இதுபோன்ற டெபிட் கார்டுகள், கிரெடிட்கார்டுகள் இருக்கின்றன?
2 கோடியே 60 லட்சம் பேரிடம்தான் கிரெடிட் கார்டுகள் இருக்கின்றன. 14
லட்சம் பேர்தான்டெபிட் கார்டுகள் மூலமாக சில்லறைக்கடைகளில் பொருள்களை
வாங்குகிறார்கள். இதனால் நம் பொருளா தாரத்தை முழுமையாக இயங்க
வைக்கமுடியுமா?
80 சதவீத ரொக்கப் பொருளாதாரம்
நம்
நாட்டில் நேரடியாக கொடுக்கல் வாங்கல் மூலம் 80 சதவீதத்திற்கும் மேலான
ரொக்கப் பொருளாதாரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. டிரக்
டிரைவர்களிலிருந்து, மீனவர்கள் வரை, தினக்கூலி தொழிலாளிகளிலிருந்து
விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் வரை அனைத்துத் தரப்பினரும் இன்றைய தினம்
அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.ஒரு 2000 ரூபாய் நோட்டை வங்கி
யிலிருந்து நான் பெற்றேன். அதனை வாங்கிக் கொண்டு பொருள்களைக் கொடுக்க
எவரொருவரும் முன்வர வில்லை. இந்த 2000 ரூபாய் நோட்டுடன் நான்
தில்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்றபோது, விமான நிலையத்தில்
இந்த நோட்டை வைத்துக்கொண்டு என்னால் எதுவும் வாங்கமுடியவில்லை. பின்னர்
சென்னையி லிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் சென்றேன்.
ரயிலிலும்
உணவோ, காப்பியோ இந்த நோட்டை வைத்துக்கொண்டு என்னால் வாங்க முடியவில்லை.
பின்னர் நான் திருநெல்வேலி யில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்து,
அங்கிருந்து இப்போது தில்லிக்கும்வந்துவிட்டேன். அந்த நோட்டு இன்னமும்
என்னிடம்தான் இருக்கிறது. எவரும் மாற்ற முன்வரவில்லை.என்ன இது? இந்த
நாட்டிற்கு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நாடு முழுவதும் என்ன
நடந்துக் கொண்டிருக்கிறது என்று பாருங்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்
வறுமையின் பிடியில் சிக்கி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அசாமில்
இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே அங்கே மட்டும்தேயிலைத் தோட்டத்
தொழிலாளர் களுக்கு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று
மத்தியஅரசாங்கம் விதிவிலக்கு அளித்திருக் கிறது. ஆனால் வங்கத்தில் உள்ள
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு, டார்ஜிலிங்கில் உள்ள தேயிலைத்தோட்டத்
தொழிலாளர்களுக்கு விதி விலக்கு கிடையாது.
என்னதான் நடந்து
கொண்டிருக் கிறது, இங்கே? அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு
விதிவிலக்கு அளிக்கும் நீங்கள், மற்றவர்களுக்கு ஏன்
அளிக்கக்கூடாது?மகாராஷ்டிரா அரசாங்கம் இன் றைய தினம் சினிமா டிக்கெட்டுகள்
வாங்க பழைய நோட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று
அனுமதித்திருக்கிறது. என்ன இது? தேநீர் அருந்தவோ, உணவு சாப்பிடவோ நாம்500
ரூபாய் நோட்டை 1000 ரூபாய் நோட்டை பயன்படுத்த முடியாது. ஆனால் சினிமா
டிக்கெட்டுகள் வாங்கலாமாம். இதுதான் கறுப்பை வெள்ளையாக மாற்றுவதற்கான
வழியா? சில வற்றிற்கு மட்டும் எப்படி விதிவிலக்கு அளிக்கிறீர்கள்?
முன் கூட்டியே பாஜக டெபாசிட் செய்தது எப்படி?
அடுத்து,
நான் சில விவரங்களை கையில் வைத்திருக்கிறேன். வங்கிக் கணக்கு எண்,
கொல்கத்தா, சென்ட்ரல் அவென்யுவில் உள்ள இந்தியன் வங்கியின் எம்ஐசிஆர்
(ஆஐஊசு) எண், என் கையில் வைத்திருக்கிறேன். இது என்னவெனில், நவம்பர்
எட்டாம் தேதி யன்று பிரதமர் 500 ரூபாய், 1000 ரூபாய்நோட்டுகளை செல்லாது
என்று அறி வித்த அன்றைய தினம், அதற்குசில மணிநேரங்களுக்கு முன்னால்,
உள்ளூர் பாஜக கிளையின் சார்பாக 500 ரூபாய் நோட்டுகள், 1000 ரூபாய்
நோட்டுகள் ஒரு கோடி ரூபாய்க்கு டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. நான்
கூறுவது தவறு என்றால் நிரூபியுங்கள். எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால்
இது என்னிடம் உள்ள சாட்சியமாகும். அனைத்து விவரங்களையும் நான்
வைத்திருக்கிறேன். எனவே, இதன்மீது புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இதுதான் நாடு முழுவதும் நடந்திருக்கிறது.
கறுப்பல்ல... வெள்ளை
உலகில்
ஒரு நாடுதான் பணம், அதாவது ரூபாய் நோட்டு இல்லா பொருளா தாரத்தை நோக்கி
நகர்ந்தி ருக்கிறது. அது சுவீடன். சுவீடனின் அனைத்து குடிமக்களையும்
அந்நாட்டு அரசு 100சதவீதம் இணையத்துடன் (ஐவேநசநேவ) இணைத்து விட்டது. எனவே
அங்கே அனைத்தையும் ஐபேட் மூலம் இணை யம் வழியாகவே செய்து கொள்ள
முடியும்.ஆனால் நம் நாட்டில் இன்றைய தினம் இணையத்தின் மூலம் பிணைக்கப்
பட்டிருப்பவர்கள் எத்தனைபேர்? உங்களிடம் உள்ள 4ஜி மற்றும்பல்வேறு
ஸ்மார்ட்போன்கள் மூலமும்எத்தனை பேரை பிணைத்திருக் கிறீர்கள்? வசதியானவர்கள்
ஒவ்வொருவரும் நான்கு போன்கள் வைத்திருக் கிறார்கள்.
நீங்கள்
நாட்டில் விற்பனையாகியுள்ள போன்களின் எண்ணிக்கை யை வைத்து நபர்களை
எண்ணிவிட முடியாது. இந்தியா போன்ற ஒரு நாட்டில், ரூபாய் நோட்டு இல்லா
பொருளாதாரம் எப்படி சாத்தியமாகும்? இங்கே சுமார் 86 சதவீத மக்கள் ரொக்க
பரிவர்த்தனை மூலமாகத்தான் அனைத்துப் பொரு ளாதார நடவடிக்கைகளையும் மேற்
கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கல் வாங்கல் அனைத்தையும் பணப்
பரிவர்த்தனை மூலமாகத்தான் செய்து வருகிறார்கள். அவை முற்றிலும்வெள்ளைப்
பணமாகும். அவை கறுப்புப் பணம் அல்ல.
என்ன சாதித்துவிட்டார் மோடி?
ரூபாய்
நோட்டுகளை செல்லாது என்று சொன்னதன் மூலம் இந்த அரசாங்கம் நான்கு முனைகளில்
சாதனைகள் படைத்திடும் என்று பிரதமர் சொல்கிறார்; அவர் கூறியவற்றில் சற்று
வெற்றி பெற்றாலாவது இந்த அரசாங்கத்தை பாராட்டலாம். ஆனால் அப்படி எதுவுமே
நடக்கவில்லை.
1
கறுப்புப் பணத்தை எப்படி ஒழிப்பது?
பிரதமர்
குறிப்பிட்டுள்ள நோக்கங்களில் ஒன்று. கறுப்புப் பணத்தைக்
கட்டுப்படுத்துவதாகும். நம் நாட்டில் உள்ள கறுப்புப்பணம் குறித்து உலக
வங்கியின் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? மொத்த இந்தியப்
பொருளாதாரத்தில் சுமார் 21 சதவீதம் அதாவது சரியாக 20.7 சதவீதம்- கறுப்புப்
பணம் இருப்பதாக அது சொல்கிறது.
அதாவது நம் பொருளாதாரத்தில்
ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமாக கறுப்புப் பணம் இருக்கிறது. இதனைக்
கட்டுப்படுத்த வேண்டும் என்பதிலோ, இது ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலோ
எந்தவித சந்தேகமும் இல்லை.ஆனால், இந்த கறுப்புப் பணம் எங்கே
இருக்கிறது?கறுப்புப் பணத்தில் 6 சதவீதம் மட்டுமே ரூபாய் நோட்டுகளாக
இருக்கிறது. நினைவில் கொள்ளுங்கள், கறுப்புப் பண பேர்வழிகள் எவரும்
கருமிகள் அல்ல. அவர்கள் தங்கள் கறுப்புப்பணத்தை தலையணைக்குக் கீழே
பதுக்கிவைத்துக் கொள்ளவில்லை. அதை அவர்கள் சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள்.
அதன்மூலம் அவர்களுக்கு மேலும் மேலும் அதிக அளவில் கறுப்புப்பணத்தை அது
கொண்டுவரும். அவர்களின் கறுப்புப் பணம், ரியல் எஸ்டேட்டில் இருக்கிறது.
இப்போது
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னபிறகு, அவை 15
ஆயிரம் ரூபாய் நாணயங்களாக, தங்க நாணயங்களாக, மாறிவிட்டன. கடந்த நான்கு
நாட்களில் மட்டும் ஏராளமாக தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு
மதிப்பீட்டின்படி தங்க இறக்குமதி மும்மடங்காக ஆகியிருக்கிறது. தங்க நகை
வியாபாரிகள் விளம்பரங்கள் செய்கிறார்கள். நானே என் போனில் ஏராளமான
குறுஞ்செய்திகளைப் பெற்றிருக்கிறேன். தங்க வியாபாரிகள் எல்லோருக்கும்
குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ‘எங்கள் கடைகள் டிசம்பர் 20
வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
நாங்கள் 500 ரூபாய்,
1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்வோம். நீங்கள் கறுப்புப் பணத்தை
தங்கமாக மாற்றிக் கொள்ள முடியும்’ என்று செய்திகள் பகிரங்கமாகவே
வருகின்றன.500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன்
மூலமாக, நீங்கள் கறுப்புப்பணத்தைக் கைப்பற்றி இருக்கிறீர்களா? அல்லது
அவற்றை தங்க நாணயங்களாக மாற்ற வசதி செய்து கொடுத்திருக்கிறீர்களா?இதே
பிரதமர்தான் கறுப்புப் பணம் குறித்து முன்பு நாட்டு மக்களிடையே
பேசுகையில், கறுப்புப் பணத்தில் 90 சதவீதம் வெளிநாடுகளில் இருக்கிறது
என்றார். இதை நாம் கூறவில்லை. அவர்தான் கூறினார். 2014 தேர்தலின்போது இதைக்
குறிப்பிட்ட அவர், வெளிநாடுகளில் உள்ள கறுப்புப்பணத்தையெல்லாம்
கொண்டுவந்து, நாட்டு மக்கள் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம்
ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று உறுதிமொழியை அளித்தார்.
எங்கே
போனது அந்த உறுதிமொழி? இப்போது ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று
அறிவித்தால் அந்தப் பணம் எல்லாம் திரும்பி வந்துவிடுமா? சுவிஸ் வங்கி
அதிகாரிகள், தங்களிடம் யார் யார் பணம் டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்ற
பட்டியலை இந்திய அரசாங்கத்திடம் அளித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். நமது
நிதி அமைச்சரோ, ‘சட்டப்பிரச்சனைகள் காரணமாக அவர்களின் பெயர்களை வெளியிட
முடியாது’ என்கிறார்.மொரீஷியஸ் பாதை குறித்தும், சிங்கப்பூர் சுதந்திர
வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். நம் நாட்டின்
கறுப்புப் பணத்தில் பாதிக்கும் மேலாக அவர்களிடம்தான் இருக்கிறது. அவற்றைக்
கொண்டுவருவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், நீங்கள் கறுப்புப்
பணத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறீர்கள்.
முதலைகள் பத்திரமாக இருக்கின்றன!
நம்நாட்டில்
உள்ள ரூபாய் நோட்டுகளில் இருக்கும் கறுப்புப்பணத்தின் அளவு வெறும் 6
சதவீதம் மட்டுமேயாகும். அதைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் பிரதமர் இந்த
அறிவிப்பினைச் செய்திருக்கிறார்.ஒரு குட்டையில் உள்ள முதலைகளைக் கொல்ல
வேண்டும் என்பதற்காக குட்டையில் உள்ள தண்ணீரை எல்லாம்
அப்புறப்படுத்திவிட்டார். பெரிய முதலைகள் நீரில்லாவிட்டால் நிலத்திற்கு
வந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்பதை அவர் மறந்துவிட்டார். பெரும்
முதலைகள் தப்பித்துக்கொண்டுவிட்டன. இறந்தது என்னவோ சிறிய மீன்கள்தான்.
ஆம்,
இப்போது இறந்து கொண்டிருப்பது சிறிய மீன்கள்தான். முதலைகள் தொடர்ந்து
இருந்துகொண்டுதான் இருக்கின்றன.கறுப்புப்பணப் பிரச்சனையை இந்த வழியில்
தீர்த்திட முடியாது. கறுப்புப் பணம் ஒன்றும் இருப்பாக எங்கும் இல்லை. அது
இயங்கிக் கொண்டே இருக்கிறது. மொத்தமுள்ள கறுப்புப் பணத்தில் 5 அல்லது 6
சதவீதம் வேண்டுமானால் இருப்பாக இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி
இயங்கிக்கொண்டே, சுழன்று கொண்டே இருக்கிறது. அதனை நீங்கள் தடுத்து
நிறுத்திவிடவில்லை. அதனைத் தடுத்து நிறுத்தாமல் கறுப்புப் பணத்தை
நிறுத்திவிட முடியாது. எனவே பிரதமர் கூறியவற்றில் உள்ள முதல் நோக்கம்
நிறைவேற்றப்படவில்லை.
2
கள்ள நோட்டு எங்கே இருக்கிறது?
இரண்டாவது
நோக்கம், கள்ள நோட்டுகள் (counterfeit notes) குறித்ததாகும்.
கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம் மேற்கொண்ட
ஆய்வின்படி, நாட்டில் புழக்கத்தில் உள்ள 1,418 லட்சம் கோடி ரூபாயில் வெறும்
0.028 சதவீதம் அல்லது 400 கோடி ரூபாய்தான் கள்ள நோட்டுகள் ஆகும். இதனை
நிதி அமைச்சரும் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார். அதை ஒழிப்பதாகக் கூறி
இப்போது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் சுமைகளை
ஏற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.
அடுத்து, இப்போது நீங்கள்
வெளியிட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுக்கு கள்ள நோட்டு வராது என்று என்ன
உத்தரவாதம்? நாம் ஏற்கனவே பெங்களூரில் கள்ள 2000 ரூபாய் நோட்டை
பார்த்துவிட்டோம். கள்ள நோட்டு ஒழிக்கப்பட வேண்டியது தேவை. அதற்கு
அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதை முதலில் வரவேற்கப்போவது நாங்கள்தான்.
கள்ள நோட்டு அடிப்பவர்களைக் கண்டுபிடியுங்கள். கள்ள நோட்டு அடிக்கப்படுவதை
நிறுத்துங்கள். நடவடிக்கை எடுங்கள். தண்டியுங்கள். இனி எவரும் அவ்வாறு கள்ள
நோட்டு அடிக்காதவாறு கடும் தண்டனை விதியுங்கள். நாங்கள் அனைவரும்
உங்களுக்கு ஆதரவாக நிற்போம். ஆனால் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு இது வழி
அல்ல.
3
பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வது தடுக்கப்பட்டுவிடுமா?
மூன்றாவதாக
பிரதமர் கூறுவது, இதன்மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பது தடுத்து
நிறுத்தப்படும் என்பதாகும். 26/11 சம்பவத்திற்குப்பின் இந்த அவையில் நாம்
பயங்கரவாதத்தை ஒழித்திட புதிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று
விவாதித்தோம். இப்போது அவைத்தலைவராக இருப்பவர்தான்(அருண்ஜெட்லி) அப்போது
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். பயங்கரவாதிகளுக்கு நிதி வருவதைத்
தடுத்து நிறுத்துவது எப்படி என்று அப்போது அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான்
விவாதித்தோம். இவற்றில் அதிகமான அளவிற்கு எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர் (இணைய
வழி பணப்பரிமாற்றம்) மூலமாகத்தான் வருகிறது.
அவ்வாறு வருவதை
எந்த சட்டத்தின்கீழ் தடுத்து நிறுத்துவது என்றுதான் யோசித்திட வேண்டும்.
மும்பை, தாஜ் ஓட்டலில் வந்து தங்கியிருந்த பயங்கரவாதிகள் எவரும்
சாக்குமூட்டைகளில் பணத்துடன் வந்து அதைச் செய்திடவில்லை. எனவே, ரூபாய்
நோட்டை செல்லாது என்று சொன்னால் பயங்கரவாதிகளை ஒடுக்கிவிடலாம் என்று
கூறுவதன் மூலம் நீங்கள் யாரை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?
பயங்கரவாதிகளுக்குப்
பணம் வருவது நிறுத்தப்பட வேண்டும் என்றால் இணையவழி பணப்பரிமாற்றத்தை
நிறுத்திட வேண்டும். உலகில் பல நாடுகள் இதனைச் செய்திருக்கின்றன.
பயங்கரவாதிகளுக்குப் பணம் வருவதைத் தடுத்திடுவது தொடர்பாக ஐ.நா. சாசனம்
மற்றும் தீர்மானங்கள் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றுங்கள்.
அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, இதுவா வழி?
4
லஞ்சம்- ஊழல்: யார் பொறுப்பு?
500
ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்துவிட்டால், லஞ்ச
ஊழல் ஒழிந்துவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இப்போது வெளியாகியுள்ள
2000 ரூபாய் நோட்டு மூலம் இது இரட்டிப்பாகிவிடும். எப்படி நீங்கள் லஞ்ச
ஊழலை ஒழிக்கப் போகிறீர்கள்? பொதுவாக லஞ்சம் குறித்து
விவாதிக்கப்படும் போதெல்லாம், அதனைப் பெறுபவரைப்பற்றி மட்டுமே
பார்க்கிறீர்கள். கொடுப்பவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
கார்ப்பரேட்டுகளின் கணக்குகளை ஆராய்வோமானால், அவர்கள் பெரிய அளவில்
கமிஷன்கள் கொடுத்திருப்பதை `சேவைக் கட்டணம்` என்றுதான்
குறித்திருப்பார்கள். அது லஞ்சம் அல்ல.
ஓர் ஏழை பத்து ரூபாய்
கொடுத்தால் யாருக்காவது கொடுத்தால் அது லஞ்சம். அவர்களைக் கையும்
களவுமாகப் பிடிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால் பெரிய
மீன்கள் – பெரிய கார்ப்பரேட்டுகள் – இங்குள்ள பெரிய கட்சிகளுக்கு
கொடுப்பதற்கு என்ன பெயர்? அவ்வாறு கார்ப்பரேட்டுகள், பெரிய கட்சிகளுக்குக்
கொடுப்பதை நிறுத்தாமல் இந்த நாட்டில் எப்படி லஞ்சத்தை தடுத்திட முடியும்?
இதில் ஏன் நாம் அனைவரும் ஒத்துப்போகக் கூடாது? நான் இதனை இங்கே பலமுறை
கூறிவிட்டேன்.
எனினும் மீண்டும் அதனை எழுப்புகிறேன். அனைத்து
அரசியல் கட்சிகளுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் நிதி கொடுப்பது
நிறுத்தப்பட வேண்டும். கார்ப்பரேட் கம்பெனியின் அந்தத் தொகைகளை அவர்கள்
விரும்பினால் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அல்லது மத்திய அரசிடம்
நேரடியாகத் தந்துவிடட்டும். பின்னர் நாம் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து
தேர்தல் செலவுகளை எப்படிச் செய்வது என்று பேசுவோம். கார்ப்பரேட்டுகள்
அரசியல் கட்சிகளுக்கு பணம் தருவது என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு
முதலீடாகும்.
எனவே அதை முதலில் நிறுத்துங்கள்.இதில்
இரண்டாவது விஷயம், அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அவர்கள்
செய்திடும் செலவினங்களையும் சேர்த்திடுங்கள். இதற்கு விதிவிலக்கு
எவருக்கும் கொடுக்காதீர்கள். அரசியல் கட்சிகள் அவர்களுக்கு என்ன தேவையோ,
எப்படித் தேவையோ அப்படி செலவு செய்கிறார்கள். கார்ப்பரேட் ஒருவரின் சொந்த
விமானத்தில் பிரதமராகப் போகிறவர் பயணம் செய்திட முடியும். அவரது கட்சிக்காக
நூற்றுக்கணக்கான ஹெலிகாப்டர்களை அமர்த்திக்கொள்ள முடியும். இதனை கட்சி
நிதி என்று சொல்கிறீர்கள். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது? எனவே,
இவற்றை நிறுத்துங்கள். அடுத்து உங்கள் நிதி அமைச்சர் அந்நிய பங்களிப்பு
முறைப்படுத்தல் சட்டத்திற்கு ((FCRA-Foreign Contribution Regulation Act)
திருத்தம் கொண்டுவந்திருக்கிறார். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள
அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுத்தால் அது தவறு இல்லை என்று திருத்தம்
கொண்டுவந்திருக்கிறார். இது ஏன்?
அருண்ஜெட்லி(குறுக்கீடு):
நாங்கள் கொண்டுவந்திருக்கும் திருத்தம் என்னவென்றால், இந்தியாவில் உள்ள
நிறுவனங்களில் கொஞ்சம் அந்நியப் பங்குகளும் இருக்குமாயின், அதனை
வெளிநாட்டுப் பங்குகளாகக் கருதக் கூடாது. அவ்வாறு கருதினால் அது மிகப்பெரிய
அளவில் கேடு பயத்திடும். எனவேதான் அவ்வாறு திருத்தம் கொண்டுவந்தோம்.
சீத்தாராம் யெச்சூரி :
அப்படியானால்
இந்தியாவில் உள்ள நிறுவனம் அயல்நாட்டில் உள்ளவர்களுக்கு நிதி அனுப்பி,
அவர்கள் மீண்டும் இங்கே திரும்ப அனுப்பலாம். (குறுக்கீடு) எப்படியோ,
கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதைத் தடுத்து
நிறுத்துங்கள். எனவே, ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று பிரதமர்
அறிவித்ததற்கான நான்கு காரணங்களுமே இதனால் நிறைவேறப்போவதில்லை.
கூட்டுறவு வங்கிகளை ஏன் முடக்குகிறீர்கள்?
நாட்டில்
உள்ள மக்களில் பெரும்பகுதியினர் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளுடன் தான்
தங்கள் தொடர்பினை வைத்துக் கொண்டி ருக்கிறார்கள். உண்மையில் இவை மிக மிக
வளமான வங்கிகள். இவற்றின் வராக்கடன்கள் அல்லது செயலற்றசொத்துகள் (சூஞஹள)
ஒரு சதவீதம் அல்லது 2 சதவீதத்திற்கும் குறைவான வையாகும். ஆனால் ரூபாய்
நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு நீங்கள் அனுமதிஅளித்திடவில்லை. இதன்
பொருள், பெரும்பணக்காரர்கள் தங்கள் நோட்டுகளை மாற்றிக் கொள்ளமுடியும்.
நாட்டிலுள்ள
மக்களில் 86 சதவீதமாக இருக்கின்ற கிராமப்புற மக்கள் தங்களுடைய வங்கிகளில்
அவ்வாறு நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியாது என்பதுதானே. இல்லை யென்றால்,
இதற்கு வேறென்ன அர்த்தம்? அதனால்தான் இந்த ஆட்சியை மக்கள்
முகமது-பின்-துக்ளக் ஆட்சி என்று கூறத் தொடங்கி இருக்கிறார்கள். கடந்த பல
நாட்களாக வங்கிகளில் நிற்கும் மக்களின் வரிசை வளர்ந்து கொண்டே இருக்கிறது.
இது மிகவும் பரிதாபகரமான நிலை.சமூக வலைத்தளங்களில் ஒரு
ஜோக்சுற்றிக்கொண்டிருக்கிறது. ஒருவர் மற்றொரு வரிடம் கேட்கிறார்:
‘இங்கிருந்து வங்கி எவ்வளவு தூரம்?’ அதற்கு அவர், ‘இரண்டுகிலோமீட்டர்’
என்கிறார். ‘பஸ்ஸில் போகலாமா?அல்லது நடந்துதான் போக வேண்டுமா?’அதற்கு அவரது
பதில், ‘இரண்டும் வேண்டாம்.
என் பின்னே நில்லுங்கள், நான்
வங்கிக்குபோவதற்காகத்தான் அதற்கான வரிசையில் தான் நின்று
கொண்டிருக்கிறேன்’.
இதுதான் இன்றைய நிலை. ஏன் இப்படி நாட்டு மக்களைத்
துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள்?நம் நாட்டில் கிராமப்புறங்களில்
உள்ளமக்களில் 80.8 சதவீத மக்கள் எந்த வங்கிகளுடனும் தொடர்பின்றிதான்
இருந்து வரு கிறார்கள். பூகோள ரீதியாக நம் நாட்டின் 93சதவீதம் வங்கிகள்
இல்லாத இடமாகும். எந்தஉலகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ-வாலட்டுகள், பே டிஎம்கள் – இவை அனைத்
தும் நாட்டிலுள்ள மக்களில் எத்தனை சதவீதத்தினரிடம் இருக்கின்றன? 90 சதவீத
மக்கள் இதில்எதனையும் பெறாத நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாட்டிலுள்ள மொத்த பணப் பரிவர்த்தனை யில் 86 சதவீதம் 500 ரூபாய், 1000
ரூபாய் நோட்டுகளின்மூலம்தான் நடந்து வந்தது. இதனைத் திடீரென்று
திரும்பப்பெற்றதன்மூலம் பொருளாதாரத்தை முழுமையாக நிலைகுலைய
வைத்திருக்கிறீர்கள். பணத்தை மாற்ற முடியாமல் இதுவரை 26 பேர் தற்கொலை
செய்து கொண்டுள்ளார்கள்.
ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வுக்கு
முன்பும் இதேபோன்று ஏதோ ஒரு பிரச்சனை முன்னுக்கு வந்து, நாடாளுமன்ற விவாதமே
தடம்புரண்டுவிடுகிறது. நம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்ப துயரங்களை
நம்மால் விவாதிக்க முடியவில்லை. எப்படி அவர்கள் பட்டினியால்
செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நம்மால் பேச முடியவில்லை.
உயர்நீதிமன்றங்களில் 452 பணியிடங் கள் காலியாக இருக்கின்றன.
விவசாயிகள்தற்கொலைகள் 26 சதவீதம் அதிகரித்திருக் கிறது. இப்போது பிரதமர்
மாற்று ஏற்பாடுகளுக்குஇன்னும் 50 நாட்கள் தேவை என்று கூறியிருக் கிறார்.
அதுவரை பழைய நோட்டுகளை செல்லும்என்று அறிவியுங்கள். டிசம்பர் 30 வரை பழைய
நோட்டுகள் செல்லும் என்று அறிவித்திடுங்கள்.
தமிழில்: ச.வீரமணி
நன்றி - தீக்கதிர் 19.11.2016
super speech
ReplyDeleteBy Mr Yechuri!
good!
Idipaarai illa yemaraa Mannan
kedupaa relaanum kedum.
-A'Ars alias Anany
There are always vested interests and counterproductive elements in our politics and the communists are the worst rogues. Those who are crying foul are the blackmoney hoarders. God only can save this nation filled with pests of politicians
ReplyDeleteYou are trying to crack a joke Mr Gopal. But laugh is not coming. Yes God only should the nation from the false patriots. You please make your comment to the people standing in the ques. You will be fortunate if you could return unhurt. Like Modi and his coterie, you also deny to apply mind on the foes of sufferings of common man
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThat is another false propaganda, You can keep that garbage in your page, not here. Why don't you try to reply the points raised here?
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteMr Gopal, I have already told you not to vomit garbage in my page. Jeyamohan is just a trash bin
Delete