Thursday, November 10, 2016

அமைதிப்படை அமாவாசை சொன்னது கரெக்ட்யா !!!



அமைதிப்படையில் வரும் இந்த இந்த காட்சியைப் பாருங்கள் . அதிலும் முக்கியமாக மூன்றாவது நிமிடத்திலிருந்து எட்டாவது நிமிடம் வரை வரும் காட்சிகள்.



சண்டை வந்தால் பழைய பிரச்சினைகள் மறைந்து போகும் என்பதுதான் இக்காட்சியின் செய்தி.



சாமானிய மனிதன் மீதான மோடியின் துல்லியமான தாக்குதல்களைக் கண்டித்தும் பிரச்சினையின் தன்மையே புரியாமல் மோடியின் ஜால்ராக்கள் வைக்கும் அபத்தமான வாதங்களுக்கும் இடையிலான சண்டையில் எத்தனை விஷயங்கள் மறைந்து போயிருக்கிறது என்பதை பார்ப்போமா?





பற்றி எரியும் காஷ்மீர் பிரச்சினை,

உரி, பதான் கோட், பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல், தூதரக அதிகாரிகள் இரு தரப்பிலும் வெளியேற்றம்.



காணாமல் போன ஜே.என்.யு மாணவன்,



அங்கே நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையின் அராஜகம்



பொது சிவில் சட்டத்தை திணிக்க முயற்சி

முன்னாள் ராணுவ வீரர் ஓய்வூதியம்

என்.டி. டிவிக்கான தடை

ராணுவ ரகசியத்தை விற்றதான வருண் காந்தி மீதான குற்றச்சாட்டு

காவிரி நதி நீர் நிர்வாக மேலாண்மை ஆணையம் 

போபால் போலி என்கவுன்டர்
 

முலாயம்சிங் யாதவ் குடும்ப மோதல்.

இவற்றை விட முக்கியமாக

அப்பல்லோவில் ஜெ .

கோபாலபுரத்தில் கலைஞர்.

அத்தனை பிரச்சினையும் மறைஞ்சு போச்சே...

மோடிடா, கேடிடா . . . .


No comments:

Post a Comment