கண்ணீர் துடைத்து சாட்டையை கையிலெடுங்கள் என்று சில மாதங்கள்
முன்பாக எழுதி இருந்தேன்.
உச்ச நீதிமன்றம் இப்போது சாட்டையை கையில் எடுத்துள்ளது, உயர்நீதி மன்ற
நீதிபதிகள் நியமனத்திற்கு தாங்கள் பரிந்துரை செய்த பெயர்களை மோடி அரசு
நிராகரித்ததை கண்டித்து அவர்களையே நியமிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி
கூறியுள்ளார்.
தற்போதைய கொலேஜியம் முறை என்பது மாற்றப்பட வேண்டியது என்பதிலும் நீதிபதிகள்
நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும்
கிடையாது.
மோடி அரசு கொண்டு வந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று உச்ச
நீதிமன்றம் சொல்லி விட்டது.
அதற்குப் பிறகு மத்தியரசு என்ன செய்திருக்க வேண்டும்?
அனைத்து அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோரோடு கலந்து
பேசி ஒரு புதிய முறையை உருவாக்கியிருக்க வேண்டும். மாறாக பிரச்சினையை அப்படியே
கிடப்பில் போட்டு விட்டார்கள். நீதிபதிகளை நியமித்தால் அரசியல் ஆதாயம் எதுவும்
கிடைக்காதல்லவா?
உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரைகளில் 34 பேரை ஏற்றுக் கொண்டுள்ளனர். 43 பேரை
நிராகரித்துள்ளனர்.
காரணம்
மோடிக்கே வெளிச்சம்!
இப்போது தாங்கள் அளித்த பரிந்துரைப்படி 43 பேரையும் நியமனம் செய்யுங்கள் என்று உச்ச
நீதிமன்றம் கண்டிப்பாக தெரிவித்துள்ளது. அரசுக்க வேறு வழியில்லை என்றும் சொல்கிறார்கள்.
மோடி அரசு என்ன செய்யப் போகிறது?
செல்லாத நோட்டுப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் சொல்வதெல்லாம் நிச்சயமாக
மோடிக்கு உவப்பாக இருக்காது.
உச்ச நீதிமன்றத்தின் மீதும் ஒரு துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்து
நீதிபதிகளையுமே பணி நீக்கம் செய்து விடுவாரோ?
பார்ப்போம்.
இந்திய அரசியல் மேலும் பரபரப்பாகப் போகிறது.
No comments:
Post a Comment