Friday, November 18, 2016

மோடியை பெத்த குற்றத்திற்கு





“என்ன தவம் செய்தனை யசோதா” என்பது பாபனாசம் சிவன் பாடல்.

“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” என்று பாரதியும் கேட்கிறார்.

“ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்” என்ற மகிழ்ச்சிகரமான மன நிலையை விவரிக்கிறார் வள்ளுவர்.

வெற்று அரசியல் ஆதாயத்திற்காக விளம்பர நாடகத்தின் பாத்திரமாக தன்னை மாற்றி வரிசையில் நிற்க வைத்து பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்கிய தன் மகனைப் பற்றி அந்த வயது முதிர்ந்த தாய் மனதில் என்னவெல்லாம் ஓடி இருக்கும்?

இவனைப் பெற்ற குற்றத்திற்காக இன்னும் என்னவெல்லாம் பாடு படப் போகிறோமோ என்று வேதனைப்பட்டிருப்பாரோ?

தன்னை பார்க்க வந்ததையே படம் எடுத்து காட்சிப்படுத்தியதை அன்றே தடுத்திருந்தால் இன்று இப்படி ஒரு நிலை வந்திருக்காதே என்று தன்னையே நொந்து கொண்டிருப்பாரோ?

தன்னுடைய விளம்பர மோகத்திற்காக பெற்ற தாய் என்றும் பார்க்காமல் அலைக்கழிக்கத் தயங்காத மகனைப் பெற்றதற்காக எத்தனை பேர் தன்னை சபிக்கிறார்களோ என்று கூனி குறுகியிருப்பாரோ?

வரிசையில் நிற்பவர்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகள், கருப்புப் பணக்காரர்கள், அடுத்தவர் பணத்தை மாற்றிக் கொடுக்கும் கூலிக் காரர்கள் என்று அசிங்கமாய் பேசி விட்டு தன்னையும் அந்த பட்டியலில் இணைத்து விட்டானே என்று கோபப்பட்டிருப்பாரோ?

இப்படி ஒரு மகனைப் பெற்றதற்காக அவரால் நிச்சயம் பெருமைப் பட்டிருக்க முடியாது.

தள்ளாத வயதுள்ள தன் அன்னையை வரிசையில் நிறுத்திய நாடகம் இருகிறதே, அது மோடியின் இதர மோசமான குற்றங்களை விடவும் மிகவும் மோசமான குற்றம்.


1 comment:

  1. எல்லாமே வேஷம்தான் நண்பரே இதை மக்கள் என்றுதான் உணர்வார்களோ.....

    ReplyDelete