Friday, November 18, 2016

மோடி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாரு

எங்கே தேடுவோம் - மோடியை
எங்கே தேடுவோம்
எங்கே தேடுவோம் - பிரதமரை
எங்கே தேடுவோம்..
நாடாளுமன்றத்தில் பதிலளிக்க
எங்கே தேடுவோம் - பிரதமரை 
எங்கே தேடுவோம்.

நாக்பூர் கோட்டையில் புகுந்து கொண்டாரோ
நாடு நாடாய் சுற்றுகின்றாரோ
அம்பானியிடம் சரண் புகுந்தாரோ
அதானியிடம் மடங்கி விட்டாரோ

எங்கே தேடுவோம் - மோடியை
எங்கே தேடுவோம்
எங்கே தேடுவோம் - பிரதமரை
எங்கே தேடுவோம்..

நாட்டுமக்கள் ரோட்டில் நிற்க
நல்ல திட்டம் போட்டுவிட்டாரே
ஊரு ஒலகம் புலம்புகிறதே
ஓடி ஒளிந்து மறைந்து கொண்டாரோ

எங்கே தேடுவோம் - மோடியை
எங்கே தேடுவோம்
எங்கே தேடுவோம் - பிரதமரை
எங்கே தேடுவோம்..

திருப்பதி கோவிலில் புகுந்துகொண்டீரோ
திருவண்ணாமலை குகை புகுந்தீரோ..
கார்ப்பரேட்டிடம் சிக்கிக்கொண்டீரோ
ஜனங்களை நாயாய் அலையவிட்ட உம்மை

எங்கே தேடுவோம் - மோடியை
எங்கே தேடுவோம்
எங்கே தேடுவோம் - பிரதமரை
எங்கே தேடுவோம்..

பார்லிமெண்ட்டில் கிழிக்கிறாங்களே
பதிலளிக்க வாங்க பிரதரே
கேள்விக்கெல்லாம் பதிலில்லாட்டி
பதவி விலகி ஓடுங்க பிரதமரே

எங்கே தேடுவோம் - மோடியை
எங்கே தேடுவோம்
எங்கே தேடுவோம் - பிரதமரை
எங்கே தேடுவோம்.
 
மேலே உள்ள பாடல் சில நிமிடங்கள் முன்பாக வாட்ஸப்பில் வந்தது. நாடாளுமன்றத்திற்கு வராத மோடியைப் பற்றி நேற்றிலிருந்து கண்டனக்குரல்களும் எழுந்து கொண்டே இருக்கிறது.
 
 
 
கடந்த வருடம் வேலூரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை  உறுப்பினர் தோழர் டி.கே.ஆர் கூறியது நினைவுக்கு வந்தது. அதை அப்போதே பதிவு செய்திருந்தேன். 
 
 
சாதாரணமான சமயத்திலேயே ஒரு வாரத்துக்கு பத்து நிமிஷம் மட்டும் வந்து போகிற மோடி, இவ்வளவு பிரச்சினை இருக்கிற நேரத்தில் அந்த வட்ட வடிவக் கட்டிடம் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டார்.
 
ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் மோடி, மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பதில் அளிப்பார் என்று எதிர்பார்ப்பது மூட நம்பிக்கை மட்டுமே.
 
இன்னொரு முறை அந்த மனிதன் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பை மறுப்பதே மக்கள் முன் உள்ள ஒரே தீர்வு. 

2 comments:

  1. until first 2 days i was in the positive impression later the poor management of this task make our life in miserable recent 2 elder death happens in my family put us big trouble. once facing the reality only know the heat....no idea what to now..half the bridge or not...or half the well....

    ReplyDelete
  2. there might be total chaos among small traders vegetable vendors hoteliers auto taxi men
    who would come to the streets ..some of them might die...
    EIGHTY SIX percent of the five hundred/thousand rupee notes are handled by common man of this country
    and modi has been torturing this EIGHTY SIX percent daily...every hour...every minute.

    ReplyDelete