Wednesday, November 16, 2016

56 இஞ்ச், 52 இஞ்ச் மார்பர்களுக்கான பாட்டு . . .





மூளையை அடகு வைத்துள்ள சொற்பமான சிலரைத் தவிர பெரும்பாலான இந்திய மக்கள் இப்பாடலில் வரும் நாசரின் இடத்தில் மோடியை வைத்துப் பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.

ஒரு பிரதமரை இப்படி எல்லாம் சொல்லலாமா என்று மோடி ஜால்ராக்கள் சொம்பைத் தூக்கிக் கொண்டு அனாமதேயங்களாக வர விரும்பினால் அதற்கு முன்பாக ஒரு நிபந்தனை..

மோடி 56 இஞ்ச் மார்பர் என்றால் அவரது ஜால்ராக்களுக்கு 52 இஞ்ச் மார்பாவது இருக்கும் அல்லவா?

வங்கியின் வாசல்களில் தவம் இருக்கும் மக்களைப் பார்த்து “நீங்கள் எல்லாம் ஊழல் செய்தவர்கள். அப்படிப்பட்ட ஊழல் பேர்வழிகளான உங்களை நாலாயிரத்து ஐநூறு ரூபாய்க்காக வரிசை நிற்க வைத்தது மட்டுமல்லாமல் கையில் மை வைத்து அவமானப்படுத்திய சாதனை எங்கள் 56 இஞ்ச் மார்பர் மோடியுடையது” என்று சொல்ல வேண்டும்.

அப்போதுதான் தெரியும் இப்பாட்டில் வருவதைக் காட்டிலும் நல்ல விருந்து மோடிக்கு முன்பே, உங்களுக்கும் கிடைக்கும்.

No comments:

Post a Comment