Saturday, November 26, 2016

மோடியின் புதிய "அரசியல் சாசன" நாடகம்

இன்றைய தினத்தை அரசியல் சாசன தினமாக அனுசரிக்க மத்தியரசு முடிவு செய்துள்ளதாம். அரசியல் சாசன முகப்பில் சொல்லப்பட்டுள்ள உறுதிமொழியை அனைத்து மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். 

இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் எனக்கு நிஜமாகவே சிரிப்பு வந்து விட்டது. அரசியல் சாசனத்திற்கு எதிராக மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள் அரசியல் சாசன தினம் என்று கொண்டாடுவது எவ்வளவு பெரிய மோசடி?

அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு தலித் மக்களின் பிரச்சினைகள பிரத்யேகமாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரை கூட்ட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்தது. அதற்காக நாடெங்கிலும் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

மோடி அரசாவது தலித் மக்களுக்காகவோ அல்லது அண்ணல் அம்பேத்காருக்காகவோ சிறப்பு கூட்டத் தொடர் நடத்திடுமா என்ன?

திடீரென அரசியல் சாசன தினம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து இரண்டு நாள் நாடகம் நடத்தியது. மோடியும் ராஜ்நாத்சிங்கும் அரசியல் சாசனம் பற்றி பேசுவதற்குப் பதிலாக மனுதர்மத்தையே பேசினார்கள், புகழ்ந்தார்கள். அவர்களின் கொள்கைப் பிரகடனம் மனு தர்மம்தானே.

தோழர் சீதாராம் யெச்சூரியின் அற்புதமான உரை மட்டுமே அந்த கூட்டத் தொடரால் கிடைத்த ஒரே பலன். தமிழாக்கம் செய்யப்பட்ட  உரையின் முதல் பகுதி   இரண்டாம் பகுதி  இரண்டின் இணைப்பின் கொடுத்துள்ளேன். முதல் பகுதியில் காணொளியின் இணைப்பு உள்ளது. 

சரி, அரசியல் சாசன தினம் அனுசரிக்க அருகதை மோடி அரசுக்கு உண்டா?



என்ன சொல்கிறது இந்திய அரசியல் சாசனம்?

இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயக, சோஷலிச, மதச்சார்பற்ற குடியரசு நாடு என்றும் அனைத்து மக்களுக்கும் நீதி, சமூக, பொருளாதார, அரசியல், கருத்துச் சுதந்திரம் அளிப்போம் என்றும் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும் இந்திய அரசியல் சாசனம் உறுதியளிக்கிறது.

இறையாண்மையை அமெரிக்காவிடம் சரணடைய வைத்து விட்ட,
சோஷலிசம் என்றால் என்னெவென்றே தெரியாத,
மதச்சார்பின்மைக்கு நிரந்தர ஆபத்தாக இருக்கிற,
கருத்துச் சுதந்திரத்தை முடக்க முயல்கிற,
உணவு உரிமையைக் கூட கேள்விக்குறியாக்குகிற,
ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிற,
சமமின்மையை மேலும் மேலும் அதிகரிக்கிற 

மோடி அரசுக்கு அரசியல்சாசன தினம் கொண்டாடும் அருகதை எங்கே இருக்கிறது?

அரசியல் சாசனத்தை நிறைவேற்றிய நாடாளுமன்றத்திற்கு முதலில் மோடி ஒழுங்காய வரட்டும். அங்கே பேசட்டும். 

அரசியல் சாசன தினம் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்



2 comments:

  1. ஸோஷலிஸம் என்றால் ஒன்றுமே செய்யாமல் போட்டதை தின்று கொண்டு சும்மா ஜாலியாக இருத்தல்.

    ReplyDelete
    Replies
    1. மோடியிசம் என்பது அம்பானி, அதானிக்கு அடியாள் வேலையும் தரகும் பார்த்து அவர்கள் வீசும் எச்சில் எலும்புத்துண்டுகளை பொறுக்கித் தின்பது.போங்கய்யா, புத்தி கெட்டவங்களா?

      Delete