Monday, November 28, 2016

அவரு நாடு நாடா, நாம நாடோடியா



நேற்று இரவு ஒரு அவசரத் தேவைக்காக பணம் எடுக்க வேண்டியிருந்தது. வேலூரில் உள்ள ஒவ்வொரு ஏடிஎம் மாக தேடிப் பார்த்தும் எதுவும் திறந்திருக்கவில்லை. திறந்திருந்த ஒன்றிரண்டு ஏடிஎம்மிலும் பணம் இல்லை.

நாடோடி போல இந்தியர்கள் தங்களின் சொந்தப்பணத்தை எடுக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள். பிச்சைக்காரர்களாக திரிய வைத்து விட்டார்.  இதற்கெல்லாம் காரணமான மனிதனோ வழக்கம் போல சொகுசாக நாடு நாடாக சுற்றிக் கொண்டு இருக்கிறார். 

ரொக்கமில்லாத இந்தியாவை உருவாக்கப் போகிறாராம். அடப்பாவி, ஏற்கனவே அதைத்தான் செய்து விட்டாயே, இனி என்ன புதிதாக செய்வதற்கு உள்ளது?

ஜியோவின் விளம்பரத்தூதராக இருந்தவர் 
இப்போது பேடிஎம் மிற்காக கூவுகிறார். 

இதற்கான விளம்பரத் தொகையை மோடி எப்படி வாங்கி இருப்பார்?

ரொக்கமாகவா? காசோலையா? இல்லை டிஜிட்டல் பரிமாற்றமா?

சஹாராவிடம் வாங்கிய 25 கோடியும் ஆதித்ய பிர்லாவிடம் வாங்கிய 60 கோடியும் எப்படி வாங்கினார் என்பதை சொல்வாரா?

அதையெல்லாம் விடுங்கப்பா,

பாஜக காரன் ஒத்தனிடம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இருபது லட்ச ரூபாய் கிடைச்சுதே, அது எப்படி வந்தது?

பின் குறிப்பு : வெக்கம் கெட்ட காவிகள் விளக்கம் சொல்ல துப்பு இருந்தா பின்னூட்டம் போடுங்க. இல்லையென்றால்  . . . . . . . ..  
வெறியில இருக்கேன். ரொம்பவுமே அசிங்கப்படுவீங்க....

1 comment:

  1. Jio is free until 31 dec 2016, where musdhan is brand ambassador. The samen musdhan is brand ambassador for paytm. Do we think this is mere coincidence. So this demonetization is brain child of those private companies in which musdhan is a working partner(CEO). After the hard earned peoples money filled up the banks than those moth** f*c*ers write-off the bank loans to those corporate. Then the peoples are allowed to withdraw their money. Finally the banks will be bankrupted and privatized.

    ReplyDelete