அவர்கள் மனிதாபிமானிகள்தான்.
இன்று மட்டுமல்ல,
நேற்றும் அதற்கு முன்பும் கூட.
அந்தமான் சிறை மீள
வெள்ளையனிடம் மண்டியிட்டு
அவர்தம் மனிதாபிமானம் பெற்ற
மாவீரரின் வாரிசுகள் அவர்கள்.
பட்டினிக் கொடுமை வேண்டாமென
விடுதலைப் போராட்ட வீரர்ளை
மனிதாபிமானம் மேலோங்கி
சிறைக்களி தின்ன வைத்த
பாரத ரத்னாவின் தவப்புதல்வர்கள்.
தள்ளாத வயதில் இருவர்
தாங்கி வரும் அவதியிலிருந்து
துப்பாக்கி தோட்டா மூலம்
அண்ணலுக்கு விடுதலையளித்த
பாச நெஞ்சம் படைத்தவர்கள்.
மெக்கா. மெதினா செல்லாமலே
அல்லாவிடம் நேரடியாய்
ஆயிரக்கணக்கானோரை
அனுப்பி வைத்த
ஈர இதயத்துக்கு சொந்தக்காரர்கள்.
உலக செல்வந்தர் பட்டியலில்
இந்தியருக்கு முதலிடம் தேடி
அதானிக்கும் அம்பானிக்கும்
ஓடி ஓடி உழைக்கிற
உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள்.
வேளாண்மை செய்து
விஷம் குடிக்காமல்
விவசாயிகளை பாதுகாக்க
நிலம் பறிக்கும்
நல்ல மனசுக்காரர்கள்.
மனிதாபிமானம் என்னவென்று
அவர்களுக்கான அகராதியில்
கற்றுக் கொண்டு
நீங்களும் காண்பியுங்கள்.
திருடர்களுக்கும் கொள்ளையர்களுக்கும்,
கொலைகாரர்களுக்கும் கூட
Excellent poem
ReplyDeletenimalan