Tuesday, June 23, 2015

பாசிப்பருப்பு வெல்ல கேசரி



கிட்டத்தட்ட நான்கு ஞாயிறுகளுக்குப் பிறகு நேற்று முன் தினம்தான் வீட்டிலிருந்தேன். மதியம் ஒரு கூட்டத்திற்கு புறப்படும்வரை நேற்று இரண்டு சமையலறை பரிசோதனைகள் மேற்கொண்டேன்.

உக்ரா என்ற பெயரில் அவள் கிச்சன் இதழில் படித்ததை முயற்சித்தேன். வழக்கம் போல நேரம் பிடிக்கும் முயற்சியைத்தான் எடுத்துக் கொண்டேன்.

ஒரு டம்பளர் பாசிப்பருப்பு, ஒரு டம்பளர் ரவா – இரண்டையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை தனியாக வேக வைத்து அதை மிக்ஸியில் அறைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீர் ஊற்றி சுடவைத்து ரவாவையும் வேக வைக்கவும். ரவா வெந்து வருகிற போது அதிலே வேக வைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும். இரண்டு டம்பளர் வெல்லமும் சேர்த்து கிளறவும். அதில் ஒரு மூடி  துறுவிய தேங்காய் சேர்க்கவும். அவ்வப்போது நெய் சேர்த்து கிளறி முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.





ஸ்டைலான பெயர் வேண்டாம் என்பதால் பாசிப்பருப்பு வெல்ல கேசரி என்றே பெயர் வைத்து வைட்டேன்.

பின் குறிப்பு : பாசிப்பருப்பை தனியாக ஒரு பாத்திரத்தில் வேக வைக்க அது அநியாயத்திற்கு நேரத்தை விழுங்கி விட்டது. அதற்கு பதில் குக்கரில் வேக வைப்பதே உத்தமம்.

இரு மாதங்கள் முன்பாக துவரம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு ரவா பருப்பு இனிப்பு கொழுக்கட்டை என்று செய்து பதிவு செய்திருந்தேன். செய்முறை மாறாக இருந்தாலும் அதே சுவையைத்தான் இந்த பாசிப்பருப்பு வெல்ல கேசரியும் கொடுத்தது.

இதோடு முடிய்வில்லை.

நேற்று ஒரு தர்ணா போராட்டம் முடிந்து இரவு வீட்டிற்கு வருகையில் என் மனைவி போளி கொடுத்தார்கள்.


என்ன திடீரென்று போளி எனக் கேட்டால் "நீங்கள் செய்த கேசரியை பூரணமாகக் கொண்டு செய்தது" என்றார்கள்.

என்ன ஒரு சாமர்த்தியம்.....
 

3 comments:

  1. கேசரியைக் கொண்டு போளியா,
    சபாஷ்

    ReplyDelete
  2. நீங்கள் இன்னும் கிளரி, பொல பொலவென்று உதிரும் நிலைக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். அதனால் நீங்களே 'பா.பருப்பு வெல்லக் கேசரி' என்று நாமகரணம் செய்யவேண்டியதாகிவிட்டது. சாப்பிட ஆளில்லாததால், அதை போளி என்ற பெயரில் மதிப்புக்கூட்டியதாக உங்கள் வீட்டில் செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. உங்கள் ஃபைனல் புராடட்க்டைப் பார்த்து, நான் டிரையல் செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

    ReplyDelete