உனக்கு பிடித்தமான உணவாய் அது இருக்கலாம்.
உன்னால் முடிந்ததும் அதுவாய் இருக்கலாம்.
எங்களுக்கு உவப்பில்லாதது அது.
உனக்கு வேண்டுமென்றால் வெளியேறு.
எங்களுக்கு எது பிடிக்குமோ
அதை உங்கள் மீதும்
உவப்பில்லையெனினும் திணிப்பதே
எங்கள் இயல்பு.
விருப்பமில்லையெனில் வெளியேறு,
வேறெங்கும் வெளியேற
விருப்பம் இல்லையெனில்
கடலில் போய் மூழ்கு.
இனிக்க இனிக்க பேசிய
எங்களின் பொய்களை நம்பி
ஐந்து
வருட குத்தகைக்கு
அமர வைத்ததும் நீங்கள்தான்.
ஆயினும் சொல்வோம்
அராஜகமாக. “வெளியேறு”
ஆதரவளிக்க மறுப்பவருக்கும் சொல்வோம்
ஆதரவளித்த அப்பாவிகளுக்கும் சொல்வோம்.
மூட்டை முடிச்சோடு வெளியேறு.
உங்களுக்கு மதிப்பில்லை,
உங்கள் நிலத்திற்குண்டு மதிப்பு.
எங்களின் மதிப்பிற்குரியவர்களுக்கு
அள்ளி அள்ளி அதைக் கொடுக்க
நீ வெளியேறு,
இந்தியாவை விட்டு வெளியேறு.
மக்களின் மனதிலிருந்து
வெளியேறிய நான் சொல்வேன்
“நீ வெளியேறு”
No comments:
Post a Comment