தமிழ் திரையிசையின் அடையாளம் இசை ஞானி
இளையராஜாவிற்கு இன்று பிறந்தநாள். என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கிறேன்.
சோர்வுற்ற தருணத்தினை உற்சாகமாக மாற்றும் மந்திர
சக்தி ராஜாவின் இசைக்கே உண்டு. என் பயணங்களில் என்றுமே வழித்துணை ராஜாவின்
பாடல்கள் மட்டுமே. சில நாட்கள் முன்பாக யாரோ ஒரு அறியாச் சிறுவன் இன்றைய
ட்ரெண்டிற்கு இளையராஜா பொருந்த மாட்டார் என ராஜாவின் இசை குறித்த பதிவிற்கு
பின்னூட்டமிட்டிருந்தான்.
வெறும் இரைச்சல்களை மட்டுமே இசையாக அறிந்திருக்கிற
இன்றைய தலைமுறையில் சிலருக்கு ராஜாவின் இசை மனதை வருடி விட்டுச் செல்லும். மனதில்
எப்போதுமே தங்கும் என்பது புரிவதற்கு வாய்ப்பில்லை. அடுத்த இரைச்சலிசை வந்ததும்
இன்றைய இரைச்சலிசை குப்பைத் தொட்டிக்கு போவது போல அல்லாமல் காலத்தால் அழியாத
நிகரற்ற இசை ராஜாவுடையது என்பதை காலம் அவர்களுக்கு புரியவைக்கும்.
பின்னணி இசையில் ராஜாவுக்கு நிகராக அவர் வருவதற்கு
முன்பும் கிடையாது. பாடல் வரிகளுக்கு இடையில் வரும் இசைக் கோர்வை மற்றும் குழுயிசை (கோரஸ்) - இவற்றிலும் இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே.
இளையராஜாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை அவர் பாடல்களை கேட்டு ரசிப்பது மூலமே தெரிவிப்போம்.
மச்சானப் பாத்தீங்களா? என்று கேட்ட அன்னக்கிளி மூலம் அதிரடியாய் தமிழ் திரையுலகில் நுழைந்து இன்னும் நம் இதயங்களை ஆட்சி செய்யும் இசையரசன் இளையராஜா.
கிராமத்துக் கொண்டாட்டத்தை எவ்வளவு இயல்பாய் தரும் இப்பாடலைக் கேட்டு முடிக்கையில் நீங்களும் மஞ்சள் குளிச்சு அள்ளி முடிச்ச உணர்வை அனுபவித்திருப்பீர்கள்.
இசையில் பல புதிய முயற்சிகளை எடுத்தவர், இன்னும் எடுத்துக் கொண்டிருப்பவர் இளையராஜா. இருவரோடு இன்னும் இருவர் பாடும் இப்பாடல் தமிழின் முதல் பாடல்
கிராமத்து பாடல்கள்தான் இவரால் முடியும் என்றவர்களின் நினைவெல்லாம் எங்கோ சிற்கை விரித்து பறந்து போனது இந்த பாடலைக் கேட்டதும். இப்படத்து பின்னணி இசையும் நம்மை திகிலில் ஆழ்த்தும்.
ஸ்டீரியோ ஒலிப்பதிவில் வந்த முதல் படத்தின் இந்த பாடல் ஒன்று லட்சம் முறை கேட்டாலும் திகட்டாத இன்னிசை.
கர்னாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் பாலம் போட்ட பாடலைத் தந்த படத்திலேயே ஆரோகணத்தில் மட்டும் பாட்டை அமைத்து அசத்தியிருப்பார். அந்த படத்திலேயே இன்னொரு முயற்சியாக மிருதங்கம் இன்றி தாளமும் தப்பாமல் சூப்பரான ஒரு பாடலைக் கொடுத்திருப்பார்.
கர்னாடக இசையை மட்டுமல்ல மேற்கத்திய இசையையும் கையாள்வதிலும் அவரது மேதமையை அதுவும் ஒரு கர்னாடக இசை ராகத்தில் கொடுத்து நமக்கு கண்ணாலே ஒரு சேதி சொல்லியிருப்பார் இப்பாடலில்.
ஹிந்துஸ்தானியில் இசையிலும் அவர் பாடல்கள் ராஜபாட்டையில் செல்லும்.
இதெல்லாம் பழசு.லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு என்ன என்று கேட்கிறீர்களா, என்னோடு வா, வா என்று இப்போதும் அவர் நம்மை கைப்பிடித்து கூட்டிச் செல்கிறார்.
உன்னை விட, உன் இசையை விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்லை என்று சொல்லி மீண்டும் ராஜாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அலைகள் எப்படி ஓயாதோ, அது போல ராஜாவின் பாடல்களை ரசிப்பதும் பகிர்வதும் ஓயாது.
ராஜாவின் பாடல்களோடு நாளை மீண்டும் சந்திப்போம், வேறு ஒரு பரிமாணத்தில்.
இசை அரசருக்கு எளியேனின் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துவோம் எங்கள் இராசாவை, எத்தனை பரிமாணங்களை பார்த்துவிட்டார் இன்னமும் புதிய இசை பிறந்துக்கொண்டு தான் இருக்கின்றது இவரிடம் இருந்து. நீஙகள் என்றென்றும் இராசா.....
ReplyDeleteஇளையராஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்க தந்த அவர் பாடல்களை நேரம் கிடைக்கும் போது கேட்டு ரசிப்பேன். நன்றி.
ராஜாவுக்கு நிகர் யாருமே எல்லை சகோ ! உங்கள் பகிர்வில் பிந்திய வாழ்த்தினை பதிவு செய்கின்றேன். ஆனால் அவருக்கு தனிமரத்தின் உயிர் வாழும் வரை தாய்க்கு ஒரு தாலாட்டுத்தான்!
ReplyDelete