உங்கள் அலைபேசி எண்ணுக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது என்ற குறுஞ்செய்தி தொடர்ந்து பலருக்கு வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட அதே போன்றதொரு மின்னஞ்சல் வந்ததை முன்னர் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
சமீபத்தில் வந்த மின்னஞ்சலும் கிட்டத்தட்ட அதே சதுரங்க வேட்டை உத்திதான். இதில் திரைக்கதை கொஞ்சம் தீட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பி.ஏ.சுவாமிநாதன் என்பவர் பல மில்லியன் டாலர் சொத்துக்களை அனாதையாக விட்டுவிட்டு விபத்தில் இறந்து விட்டாராம். வாரிசு இல்லாத அவரின் சொத்து அமெரிக்க அரசின் கஜானாவிற்குச் செல்லும் முன் மீட்பதற்கு உதவ வேண்டுமாம். எனது பெயரிலும் சுவாமிநாதன் இருப்பதால் நான் தலையிட்டு உதவ வேண்டும் என்று கேட்கிறார் அந்த வழக்கறிஞர்.
கீழே அந்த டுபாக்கூர் மின்னஞ்சலைப் பார்க்கவும்.
தமிழர்களின் இளிச்சவாய்த்தனத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை......
இலவசம்னு தெரிந்தால் நம்ம ஆளு தான் வாயை பொளப்பானே. அதான் இப்படி...
ReplyDeleteமுன்னாலெல்லாம் பெரும்பாலும் ஆப்பிரிக்காவை வைத்து வரும். தங்க பஸ்பம் அளவுக்கு அதிகமாக இருக்கு என்றெல்லாம். இப்போது, தமிழ் பெயரை வைத்து வருகிறது போலிருக்கிறது. தமிழந்தான் ஃப்ரீயாக் கிடைத்தால் பினாயிலையும் குடிப்பவன் என்ற பாரம்பரியம் உள்ளவனாச்சே.
ReplyDelete