Friday, June 19, 2015

ஆர்.கே.நகரில் அமைச்சரின் பிழைப்பு இதுதான்




ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோலம் இது.

இரட்டை இலைச் சின்னத்தை கையில் பச்சை குத்திக் கொள்ளச் சொன்ன கட்சியில் இது ஒன்றும் அதிசயமில்லை. தலையில் விளக்குக்கு பதிலாக முகத்தில் பெயிண்ட் அடித்துக் கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கும் தலையாட்டுவார்கள். அப்போதுதானே பிழைப்பு தொடரும்.

இதைப் பார்க்கும் போது ஒரு பழைய சம்பவம் ஒன்று எனக்கு நினைவிற்கு வந்தது. 

"உதிர்ந்த ரோமம்" என்று ஜெ வால் வர்ணிக்கப்பட்டு மீண்டும் "அம்மா சரணம்" என்று பாதாரவிந்தம் பணிந்த எஸ்.டி.சோமசுந்தரம் என்ற சுயமரியாதைச் சுடர் ஒருவர், ஏதோ ஒரு இடைத் தேர்தலில் ஜெ வின் பிரச்சார வேனில் தொங்கிக் கொண்டு வந்தார்.

பாவம் இன்றைய அமைச்சர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை போல!

9 comments:

  1. இரட்டை இலைச் சின்னத்தை கையில் பச்சை குத்திக் கொள்ளச் சொன்ன கட்சியில் இது ஒன்றும் அதிசயமில்லை. தலையில் விளக்குக்கு பதிலாக முகத்தில் பெயிண்ட் அடித்துக் கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கும் தலையாட்டுவார்கள்.

    துயரமான உண்மை தாங்க.

    ReplyDelete
  2. sir,
    first Neenga unga thaaiku magan
    appuram LIC uliyar.

    adupola avar

    first Katchi Thondar
    appuram minister...

    Avanga katchiku avaanga vote
    ketkaamey...
    Ungalayaaa koopiduvaanga sir!

    Y.Anna

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக இப்படியா?

      Delete
  3. நீங்க வேற.. கோமணத்தோட பிரச்சாரம் பண்ணாத்தான் மந்திரி பதவி அப்படின்னு சொன்னா என்ன ஆகும்னு நினைக்கறீங்க? எல்லாரும் வெறும் கோமணத்தோட அலைவானுங்க!

    ReplyDelete
  4. Why komanam, even without komanam
    nimalan

    ReplyDelete
  5. உதிர்ந்த ரோமம் என வர்ணிக்கப்பட்டவர் நாவலர்நெடுஞ்செழியனே தவிர எஸ் டி எஸ் அல்ல.

    ReplyDelete
    Replies
    1. நாவலர் நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரம், க.ராஜாராம் இவர்களோடு இன்னும் ஒருவர் அதிமுகவிலிருந்து வெளியேறிய போது அம்மையார் கொடுத்த பட்டம் "உதிர்ந்த ரோமங்கள்". நாவலருக்கும் பொருந்தும், எஸ்.டி.எஸ் ஸிற்கும் பொருந்தும். நால்வரும் மீண்டும் ஒட்டிக் கொண்டார்கள் என்பதும் ஒரு செய்தி

      Delete
    2. எஸ்டிஎஸ், எம்ஜிஆர் இருக்கும்போதே அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயாவுக்கு அளித்த முக்கியத்துவம் பிடிக்காமால் வெளியேறி நமது கழகம் கட்சி ஆரம்பித்தார் .

      பின்பு , எம்ஜிஆர் காலமான பின் அதிமுக முழுமையாக ஜெயாவின் கைகளுக்கு போனபின் , சசிகலா பரிவாரங்களின் பக்கபலத்தோடு ( ஒரெ சாதி ) அதிமுகவிற்கு வந்து கோலோச்சினார் .

      1996 இல் ஜெயாவின் படுதோல்விக்கு பின்னர் அதிமுகவிலிருந்தும் , ஜெயாவிடமிருந்தும் விலகினார் , சில வருடங்களின் பின் காலமானார் .

      நெடுஞ்செழியன் , ராசாராம், பண்ருட்டி , பாண்டியன் வெளீயேறியபோது எஸ்டிஎஸ் அதிமுகவிலேயே இருக்கவில்லை . உதிர்ந்த ரோமம் வெளியேறிய அந்த நால்வர் அணிக்கு பொருந்துவது போல் எஸ்டிஎஸுக்கு பொருந்தாது . அது அவருக்கு சொல்லப்பட்டதுமல்ல ..

      Delete
  6. அமைச்சர், மாவட்டச் செயலாளர் போன்றவைகள் மற்றவர்களுக்குத்தான். அதிமுகவில், அதுவும் ஜெவின் அதிகாரத்தில் எல்லோரும் சமமே. கட்சிக்குக் கொடுக்கும் மரியாதையை வைத்துத்தான் அவர்களுக்கு அதிகாரம். இது ஒருவகையான கன்ட்.ரோலே. இதை எல்லோரும் குறை சொன்னாலும், தன் கட்சியில் அவ்வாறு நடத்தமுடியவில்லையே என்ற எரிச்சல் தோன்றுவது இயற்கைதான். (கம்யூனிஸ்டுகள் நீங்கலாக).

    கம்யூனிஸ்டுகளிலும் இப்போது (CPI) கட்சிக்கட்டுப்பாடு குறைவதைக் காணமுடிகிறது (போன பொதுச்செயலாளர் தேர்வின்போது)

    ReplyDelete