வீராதி வீர, சூராதி
சூர, புஜ பராக்கிரம ஐம்பத்தாறு இஞ்ச் மார்பழகன், மல் யுத்த மாவீரன் நரேந்திர
மோடியின் இன்னொரு கப்ஸாவும் இப்படி அம்பலமாகி விட்டதே.
உத்தர்க்ண்டில்
பத்தாயிரம் குஜராத்திகளை வெள்ளத்திலிருந்து காப்பாற்றி “ராம்போ” அவதாரம் எடுத்த
மோடியார் “பாய்ஸ், என்னுடன் டின்னருக்கு வாருங்கள்” என்று ஆப்கானிலிருந்த தூதரக
வீரர்களை அழைத்தது அடுத்த கதை.
இப்போது ஏதோ மோடியும்
மனோகர் பாரிகரும் ராஜ்யவர்த்தன் ரதோருமே மியான்மருக்கு உள்ளே நுழைந்து
அங்கேயிருந்த தீவிரவாதிகளை துவம்சம் செய்து வந்ததாய் தங்களுக்கு தாங்களே பாராட்டு
மடல் வாசித்து வந்தார்கள்.
“பாத்தியா எங்க
வீரத்தை, ஒழுங்கா இருக்கனும்” என்று எல்லா அண்டை நாடுகளையும் எச்சரித்துக்
கொண்டிருந்தார்கள். அது மட்டுமா ஐம்பத்தாறு இஞ்ச் மார்பு கொண்ட வீர மகனால்
மட்டும்தான் இது முடியும் என்று சவடால் விட்டுக் கொண்டிருந்தார்கள். “இந்த
டயலாக்கையெல்லாம் வேற எங்கயாவது போய் பேசு கண்ணா”
என்று பாகிஸ்தான் அரசு வேறு பதில் சொல்லி விட்டது.
ஆனால் இப்போது மியான்மர்
எல்லைக்குள் எல்லாம் இவர்கள் செல்லவில்லை. மாறாக இந்திய எல்லைக்குள்தான் சண்டை
நடந்தது என்பது தெளிவாகி விட்டது.
விஷால் நடித்த "வெடி"
படத்தில் விவேக் சட்டைக்குள் பலூன் வைத்து காற்றடித்து தான் பெரிய பயில்வான், பாடி
பில்டர் என்று காண்பித்துக் கொள்வார்.
மோடியின் ஐம்பத்தாறு
இஞ்ச் மார்பும் வெறும் காற்றடித்த பலூன் தான். ஒவ்வொரு முறையும் புஸ்ஸென்று போய்
விடுகிறது.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete