Saturday, June 13, 2015

அடுத்து சாட்டையடியா?

 

முதலாளிகளுக்கு நடைபாவாடை விரிப்பதில் மோடிக்கு நான் சளைத்தவன் அல்ல என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நிரூபித்துள்ளார்.

தொழிற்சாலைக்கான அனுமதி கொடுப்பதற்கு ஏதாவது ஊழியர் அல்லது அதிகாரியின் மேஜையில் கோப்பு தங்கினால் ஒவ்வொரு நாளுக்கும் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். உலகின் புதுமையான திட்டம் என்று முதலாளிகள் மகிழ்ச்சியில் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.

கோப்புகள் வேகமாக நகர்வது நல்லதுதானே என்று தோணலாம். ஆனால் வேகமாக கோப்புக்கள் நகர வேண்டுமானால் விதிகள் அங்கே பின்னுக்கு போகும் என்றுதான் அர்த்தம். சுற்றுச்சூழல் விதிகளையும் தளர்த்தியுள்ளார்கள். 

இப்போது அபராதம் என்றால் அதிகாரிகள் தங்களுக்கென்ன என்று அலட்சியமாக எதையும் சரி பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து போட்டு விடுவார்கள். முதலாளிகளுக்கு தேவை அதுதானே. 

இப்போது அபராதம் விதிக்கும் முதல்வர், அடுத்து சாட்டையால் அடிப்பேன் என்று சட்டம் போடுவாரா?

 

No comments:

Post a Comment