திமுகவின் முன்னாள் அமைச்சர், இந்நாள் மாவட்டச் செயலாளர், திருவண்ணாமலையில் உள்ள இரண்டு பொறியியல் கல்லூரிகள், ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவற்றின் உண்மையான சொந்தக்காரர், முன்னாள் நடத்துனரான திரு இ.வ.வேலு சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது இன்றைய செய்தி.
சிறப்பு நீதி மன்றம், உயர் நீதி மன்றம் இங்கெல்லாம் செல்லாமலேயே திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியே வழக்கை தள்ளுபடி செய்து விட்டதாக பத்திரிக்கைச் செய்தி சொல்கிறது.
இனி சொத்து குவிப்பு வழக்கு போட்டால் எந்த அரசியல்வாதியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை போலும்!
அந்த வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்படும் என்று நாடாளுமன்றம் ரகசியமாக சட்டம் இயற்றி விட்டதா என்று தெரியவில்லை.
இந்த செய்திகளை படிக்கும் போது பரிதாபத்திற்குரிய ஒரு மனிதர் நினைவிற்கு வருகிறார்.
ஜெ வின் முதல் ஆட்சிக்காலத்தில் கல்வித்துறை அமைச்சராக இருந்த பேராசிரியர் பொன்னுசாமி என்பவர் சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை பெற்று அதை அவர் முழுவதும் அனுபவிக்க வேறு செய்தார்.
சொத்து குவிப்பு வழக்கா! கவலையே வேண்டாம் :(
ReplyDelete