பதிவர் திரு விசுawesome அவர்களின் விசுவாசமின் சகவாசங்கள் நூல் வெளியீட்டு விழா இன்று வேலூர் ஊரிஸ் கல்லூரியில் நடைபெற்றது.
வி.ஐ.டி வேந்தர் திரு ஜி.விஸ்வநாதன் அவர்கள் நூலை வெளியிட்டு உரையாற்றினார். திரு விசுவாசம் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர். திரு விசுவாசம் அவர்களின் தாயார் செய்து வரும் சமூக நலப் பணிகள் குறித்து பலரும் பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பேரன் பாடிய ஒரு பாடலும் நன்றாக இருந்தது. த,மு,எ,க,ச மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் கவிஞர் முத்து நிலவன் தன் அழகு தமிழால் நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார்.
இந்த நூல் விற்பனை மூலம் வரும் தொகையை வேலூரிலேயே சமூக நலப் பணிகளுக்கு பயன்படுத்தப் போவதாக திரு விசுவாசம் அறிவித்தார். பாராட்டத்தக்க செயல் இது.
பல வலைப் பதிவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஒரு சிறப்பம்சம்.
திருவாளர்கள் திண்டுக்கல் தனபாலன், மதுரைத் தமிழன், தருமி, ராயல் செல்லப்பா, கோவை ஆவி, தில்லையகத்து துளசிதரன், கீதா. மகேஷ், வாத்தியார் எனும் அன்பு பால கணேஷ், மூங்கில் காற்று முரளி மற்றும் உள்ளூர் அன்பே சிவம் சிவசக்தி என பலரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இன்னும் ஓரிருவர் கூட இருந்தார்கள்.
அத்தனை பேரோடும் அறிமுகம் செய்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். இன்னும் கொஞ்ச நேரம் கூட இருந்து பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் வேறொரு பணி காரணமாக புறப்பட வேண்டியதாயிற்று.
புதுக்கோட்டையில் பதிவர் திருவிழா நடத்தலாம் என்ற யோசனை இருப்பதாக தோழர் முத்துநிலவன் கூறினார். நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் அப்போது அனைவரையும் நேரில் சந்திக்கலாம்.
நூல் வெளியீட்டிற்கும் பல பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கியதற்கும் திரு விசுவாசம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
இன்றைய நிகழ்வின் புகைப்படங்கள் கீழே.
பந்திக்கு முந்து என்பது பழைய மொழி
ReplyDeleteபதிவுக்கு முந்து என்பது புதிய மொழி
பட்டய கிளப்புங்க
//திருவாளர்கள் திண்டுக்கல் தனபாலன், மதுரைத் தமிழன், தருமி//
ReplyDeleteஇந்த விஜபிகளை நீங்க நேரிலே பார்த்தீங்களா!!!
ஆமாம், நிஜமாகத்தான். அதற்கு சாட்சியாகத்தான் புகைப்படங்கள்
Deleteவாத்தியார் எனும் அன்பு பாலகணேஷ் அவர்கள் பெயரை விட்டுட்டீங்களே சரி செய்ய முயற்சிக்கவும்
ReplyDeleteஇணைத்து விட்டேன்
Deleteநினைவுபடுத்திய அன்பேசிவம் சிவசக்திக்கு மனம் நிறைந்த நன்றி. சுடச்சுட அசத்தலான படங்களாட பகிர்வு தந்து அசத்திட்டீங்க ராமன் ஸார்.
Deleteமிக்க மகிழ்ச்சி. படங்களுடன் நிகழ்ச்சியை தனது வலைத்தளத்தில் வெளியிட்ட தோழருக்கு நன்றி. (ஆண்கள் எல்லோரும் மேடையில் அமர்ந்திருக்க அந்த பெண்மணி மட்டும் ஏன் கீழே அப்படி அமர்ந்து இருக்கிறார் என்று தெரியவில்லை.)
ReplyDeleteஅவரை நிற்கச் சொன்ன போதும் அமர்ந்து கொள்வதையே விரும்பினார்
Deleteஅருமையானதொரு விழா
ReplyDeleteபதிவர்களை ஒருங்கே காணும் போது மகிழ்ச்சி எழுகிறது
விசுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றேன்
நன்றி நண்பரே
minnal vekathil netriya vizavai patri rompa azakavum-surukkamaavum ezuthi vittirkal sir.
ReplyDeleteungalai santhiththathil mikka makizchi sir.
உங்களை சந்தித்தது எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சியளித்தது. தொடர்பிலிருப்போம்
Deleteவிழா சிறப்பாக நடைபெற்றமைக்கு எமது வாழ்த்துகளும்...
ReplyDelete-கில்லர்ஜி
அடடா.. மின்னல் வேகத்தில் பதிவிட்டிருக்கிறீர்கள்.. வியப்பானவர்தான். உங்கள் வெற்றிக்குப் பின்னால் இப்படி ஒரு வேகமிருப்பது புரிகிறது. உங்களை நேரில் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. மீண்டும் புதுக்கோட்டையில் சந்திப்போம். இதுபற்றிய என் பதிவும் பார்க்க அழைக்கிறேன்...
ReplyDeleteபுதுக்கோட்டையிலும் சந்திப்போம் ஐயா...
ReplyDelete