Wednesday, June 24, 2015

அவர்கள் நிரந்தரமானவர்கள் - ஆமாம்

தமிழ்த் திரையுலகின் ஒப்பற்ற விற்ப்பன்னர்கள் இருவருக்கும் இன்றுதான் பிறந்தநாள் என்பது ஒரு அதிசயமான ஒற்றுமை.

 http://www.msvtimes.com/images/rare/MSV-Kannadasan.JPG

1927 ம் ஆண்டு 24 ஜூன் அன்று பிறந்த கவியரசு கண்ணதாசனும் 1928 ம் ஆண்டு 24 ஜூன் அன்று பிறந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும்  இணைந்து பல காலத்தால் அழியாத பாடல்களை அளித்தார்கள் என்பது சிறப்பு. 

மெல்லிசை மன்னருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறி அவரும் கவியரசும் இணைந்து அளித்த பாடல்களில் பத்து பாடல்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்றும் சகோதரப் பாசத்திற்கு எடுத்துக்காட்டு, உள்ளத்தை உருக்கும் இப்பாடல்தானே! 

உண்மையான நட்பிற்காக உயிரை அர்ப்பணித்த ஒரு உத்தமனின் பெருமையைச்  சொல்லும் உருக்கமான பாடல் இது. (எத்தனை உ?)

கனியிருப்ப காய்  எதற்கு என்ற வள்ளுவன் வாக்கை பொருந்தாமல் செய்யும்  இப்பாடல். 

சித்தாந்தத்திற்கும் வேதாந்தத்திற்கும் என்ன  வித்தியாசம் என்பதை கவிஞர் எழுத, அதற்கு மெல்லிசை மன்னர் இசையமைக்க, யேசுதாஸ் மெருகூட்டிய பாடல் இது.

மன்னன் மயங்கும் மர்மம் என்ன   என்பது இப்பாடலைக் கேட்டால் தெரிந்து விடும்.

பெரும் புலவர்கள் எல்லாம் நிஜமாகவே ஏமாந்து போனார்களா என்ன?

மே மாதம் படப்பிடிப்பிற்குச் செல்ல வேண்டும் என்று  மீண்டும் மீண்டும் கேட்டதால். என்ன ஆடு போல மே, மே என்று சொல்லுகிறாய் என்ற கவியரசு கொடுத்த பாடலிலும் ???

இருவரில் ஒருவ்ரின் ஆடல் கொஞ்சம் சங்கடப் படுத்தினாலும்  தமிழின் சிறந்த நடனப் பாடல்களில் இதுவும் ஒன்று.

இப்படி ஒரு பாடல் கேட்டால்  புவி அசைந்தாடாதா என்ன?


5 comments:

  1. இவர்கள் நிரந்தரமானவர்கள்தான்

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், இது நம் வயதோடு இணைந்து வந்த பாடல்கள் என்பதால்தான் நாம் அதனை நினைவு வைத்துள்ளோம். 40 வயசுக்காரங்க, இளையராஜாவையும், 20-30 வயசு, ஏ ஆர் ரகுமானையும் நினைவு வைத்துக்கொள்வது பொருத்தம்தானே !

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் சார், இந்த வயசு வித்தியாசங்களை எல்லாம் அப்படியே ஒரு பக்கமா தூக்கி போட்டுடுங்க.வெளிநாடுகளில் உள்ள சிறு தமிழ் பசங்க இளையராஜா புகழ்பாடியதால் தான் (தோழர் போன்றவர்களும் காரணம்) என்ன இது என்று இளையராஜா பாடல்கள் கேட்க நான் தொடங்கினேன்.பழைய கால விஸ்வநாதன் சாரின் மீதும் இசைபிரியர்களுக்கு மதிப்பு இருப்பதை அவதானித்தேன்.
      கண்ணதாசன் பற்றி நல்லதாக நான் அறியவில்லை அவர் ஒரு மோசமான சந்தர்பவாதி என்பதை தவிர, அவரைபற்றிய தோழரின் கருத்து வியப்பளிக்கிறது.

      Delete
    2. கவியரசு கண்ணதாசனின் அரசியல் எனக்கும் ஏற்புடையதில்லை. ஆனால் அவரின் புலமைக்கு நான் ரசிகன். வேடம் போடாமல் தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக பேசுகிறவர் என்ற வகையில் அவர் ஒரு நல்ல மனிதன்.

      Delete
    3. நெல்லைத் தமிழன் சார், நான் இன்னும் நாற்பதுகளில் இருப்பவன்தான். அடுத்த வருடம்தான் ஐம்பதைத் தொடுவேன்

      Delete