Thursday, June 4, 2015

காணாமல் போனது கலைஞர் பேனர். ஆனால்?

 
எங்கள் சத்துவாச்சாரி பகுதியில் திமுகவினர் கலைஞர் பிறந்தநாளுக்காக ஏராளமான பேனர்கள் வைத்திருந்ததை நேற்று அலுவலகம் செல்லும் போது கவனித்தேன்.

இரவு வீடு திரும்பும் போது பார்த்தால் சுத்தமாக ஒரு பேனர் கூட காணவில்லை. அனுமதி பெறாத பேனர்களை அகற்றி சட்டம் தன்னுடைய கடமையை செய்துள்ளது என்று நினைத்துக் கொண்டேன்.

கொஞ்ச தூரம் சென்றதும் பார்த்தால் ஜி.கே.வாசனை வரவேற்று அதிகமான அளவில் பேனர்கள் வைத்திருந்தார்கள். அவற்றிலும் பெரும்பாலான பேனர்களில் அனுமதி பெற்றதற்கான அத்தாட்சிக் கடிதம் இல்லை. 

இன்று காலை பார்க்கும் போதும் அந்த பேனர்களில் வாசன் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

"தீர்ப்பை தீர்ப்பாகத்தான் பார்க்க வேண்டும்" என்ற அரிய விளக்கத்தைச் சொன்னதால் சட்டம் அவர் மீது கருணை காண்பித்து விட்டது போல.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete